முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். - கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஏப். 15 - 5 -வது ஐ.பி.எல். 20 -க்கு 20 போட்டியி ல் கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத் தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தா ன் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், காலிஸ், பிஸ்லா இரு வரும் நன்கு பேட்டிங் செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக  எம்.கே.திவாரி, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, ஷா கிப் அல் ஹசன் மற்றும் நரைன் இருவ ரும் நன்கு பந்து வீசி முக்கிய விக்கெட்டை எடுத்தனர். இதில் வேகப் பந்து வீச் சு எடுபடவில்லை. 

ஐ.பி.எல். போட்டியின் 15 -வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கேப்டன் டிரா விட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர் ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 131 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

ராயல்ஸ் அணி தரப்பில், ஓவாஷிஸ் ஷா 33 பந்தில் 31 ரன்னை எடுத்தார். தவிர,கேப்டன் டிராவிட் 28 ரன்னையு ம், ரகானே 19 ரன்னையும், கீப்பர் கோ ஸ்வாமி 24 ரன்னையும், ஹாட்கே 12 ரன்னையும் எடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஷாகிப் அல் ஹசன் 17 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். தவிர, சுனில் நரைன் 1 விக்கெட் எடுத்தார். வேகப் பந்து வீச் சாளர்களுக்கு விக்கெட் கிடைக்கவில் லை. 

கொல்கத்தா அணி 132 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை ராஜஸ்தான் அணி வைத்தது. அடு த்து களம் இறங்கிய அந்த அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன் னை எடுத்தது. 

இதனால் கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இது கொல்கத்தா அணிக்கு இந்தத் தொடரி ல் 2-வது வெற்றியாகும். 

கொல்கத்தா அணி தரப்பில், காலிஸ் 38 பந்தில் 31 ரன்னை எடுத்தார். தவிர, பிஸ்லா 29 ரன்னையும், எம்.கே.திவாரி 24 ரன்னையும், ஷாகிப் அல் ஹசன் 16 ரன்னையும் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி சார்பில், போத்தா 29 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடு த்தார். தவிர, ஏ.சிங், ஹாக் மற்றும் மெ னேரியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஷாகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago