முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்னா ஹாங்காங் வீராங்கனையுடன் மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப். 15 - இந்தியன் ஓபன் உலகக் தொடர் பேட் மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெக்வால் ஹாங்காங் வீராங்கனை யிப் புய் யின்னுடன் மோத இருக்கிறார். இந்தியன் ஓபன் உலகக் தொடர் பேட் மிண்டன் போட்டிகள் இம்மாதம் 24 -ம் தேதி டெல்லியில் துவங்க இருக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற இந்தப் போட்டி ஒரு முக்கியமான போட்டியாகும். எனவே இந்தப் போட்டி முக்கியத்துவம் பெற்று உள்ளது. 

இந்தப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய் னா நெக்வால் தனது முதல் ஆட்டத்தி ல் ஹாங்காங் வீராங்கனை யிப் புய் யின்னுடன் மோத இருக்கிறார். ஹாங் வீராங்கனை யின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனையாவார். எனவே இந்தச் சுற்றில் அவர் கடும் சவாலை நெக்வாலுக்கு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா இதற்கு முன்னதாக தொடர்ந்து 3 முறை யின்னை தோற்கடித்து இருக்கிறார். ஆனால் 2010 -ம் வருட ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதியில் அவரிடம் நெக்வால் தோற்றார். 

உலக பேட்மிண்டன் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 5 - வது இடத்தில் இருக்கும் சாய்னா இந்தப் போட்டியில் 3 - ம் நிலை வீராங்கனையாக கணிக்கப்பட்டு இருக்கிறார். 

சாய்னா இடம் பெற்றுள்ள அதே பிரி வில் சீன வீராங்கனை சிஜியான் வாங் கும் இடம் பெற்று இருக்கிறார். அவர் முதல் நிலை வீராங்கனையாவார். 

சீன வீராங்கனை வாங்கும், டென்மார்க் வீராங்கனை டினே பானும் காலிறு தியில் மோத உள்ளனர். டென் மார்க் வீராங்கனை இரண்டு முறை அகில இங்கிலாந்து சாம்பியனாவார். 

டென்மார்க் வீராங்கனை இதில் வெற் றி பெறும் பட்சத்தில் அடுத்து நடக்க இருக்கும் போட்டிகளில் அடுத்தடுத்து சீன வீராங்கனைகளுடன் மோத வேண்டிய நிலை உள்ளது. 

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஜூவாலா கட்டா மற்றும் அஸ் வினி பொன்னப்பா இருவரும் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் கடும் சவாலை சந்திக்க உள்ளனர். 

இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் இந்தப் போட்டியில் ஹாங்காங் கைச் சேர்ந்த பூன் லாக் யான் மற்றும் சே யிங் சுயட்டுடன் மோத உள்ளனர். இந்தப் போட்டியின் கலப்பு இரட்டை யர் பிரிவில் முன்னணி வீராங்கனையான ஜூவாலா கட்டா வி. டிஜூவுட ன் இணைந்து ஆட இருக்கிறார். 

ஜூவாலா மற்றும் டிஜூ ஜோடி தங்களது முதல் சுற்றில் சீனாவைச் சேர்ந்த ஜியாமிங் டாரோ மற்றும் ஹூவான் ஜியாவுடன் மோத உள்ளனர். அதேபோல ஆடவருக்கான ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீரர்கள் கடும் சவா லை சந்திக்க உள்ளனர். இந்திய வீரர் அஜய் ஜெயராம் இங்கிலாந்து வீரர் ரா ஜீவ் அவுசெப்பை சந்திக்க இருக்கிறார். கஷ்யப், ஸ்பெயின் வீரர் அபியானுடன் மோத உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago