முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.எப் -க்கு கூடுதல் அதிகாரம் நரேந்திரமோடி பிரதமருக்கு கடிதம்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ஆமதாபாத், ஏப். - 16 - எல்லை பாதுகாப்பு படைக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.  இந்தியாவின் எந்த பகுதியிலும் கைது சோதனை மற்றும் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள பி.எஸ்.எப். க்கு அதிகாரம் அளிப்பது அரசுக்குள் ஒரு அரசை அல்லது இரண்டாவதாக ஒரு அரசை ஏற்படுத்தும் முயற்சி என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். தேசத்தின் கூட்டாட்சி முறையை குலைப்பதற்கான மத்திய அரசின் மற்றொரு முயற்சி இது. இப்போதைய அரசு மாநில அதிகாரத்தை பறிப்பதில் முனைப்புடன் உள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள முதல்வர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.  மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் உள்ள தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம், ரயில்வே பாதுகாப்பு படைக்கு அதிக அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். எனக்கு தெரிந்தவரை எல்லை பகுதியை பாதுகாக்கும் நோக்கத்துடன்தான் பி.எஸ்.எப். உருவாக்கப்பட்டது. எல்லை பகுதியில் குற்றவாளிகளை கைது செய்யவும், விசாரிக்கவும் பி.எஸ்.எப். புக்கு அதிகாரம் உள்ளது. பேரிடர் காலங்களிலும் நெருக்கடியான காலங்களிலும் துணை ராணுவ படைகள் மாநில அரசுக்கு உதவி வருகின்றன. எனினும் அவற்றுக்கு கைது செய்யவும், விசாரிக்கவும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.  மாநில போலீசின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது மாநில போலீசார் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களது ஒழுங்கை குலைத்து விடும் என்று அந்த கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளார். பி.எஸ்.எப். தற்போது நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நாட்டின் பிற பகுதிகளிலும் குறிப்பாக நக்சல் பாதித்த பகுதிகளிலும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பி.எஸ்.எப். கோரி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்