முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பால்தாக்கரே பாராட்டு

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, ஏப். - 16 - பீகார் மாநில முன்னேற்றத்தில் முதல்வர் நிதீஷ்குமாரின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே பாராட்டியுள்ளார். அதே சமயம் மகராஷ்டிரா மாநிலத்தில் பீகார் தினம் கொண்டாடுவதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் வரவேற்பு தெரிவித்துள்ள ராஜ்தாக்கரேயை அவர் கடுமையாக சாடினார். சிவசேனையின் அதிகாரபூர்வ ஏடான சாம்னாவில் பால்தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது, மும்பையில் பீகார் தினம் கொண்டாடுவதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் அதை வரவேற்றதன் மூலம் ராஜ்தாக்கரேவின் நடிப்பு வெளிப்பட்டுள்ளது. ராஜ்தாக்கரேயின் வாக்கு வங்கி அரசியல் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது நாடகம் முழு தோல்வியடைந்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  அதனால்தான் பீகார் தினம் கொண்டாடப்படுவது குறித்து மற்றவர்கள் என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து கவனித்து விட்டு பிறகு சிவசேனா கருத்து தெரிவித்தது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். பீகார் மாநிலம் நிதீஷ்குமாரின் தலைமையில் மிக சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது. ஜாதி அரசியலால் பின்தங்கியிருந்த அம்மாநிலம் இப்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு நிதீஷ்குமாரின் தலைமையே காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.  கர்நாடக மாநிலம் பெல்காமில் மராத்தி பேசும் மக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போது அதை மற்ற கட்சிகளை விட அதிகம் எதிர்த்தது சிவசேனாதான் என்று குறிப்பிட்ட அவர், மராத்தியர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். மகராஷ்டிரா மாநிலம் மராத்தியர்களுக்கே என்று முதலில் குரல் கொடுத்தது சிவசேனாதான் என்றும் பால்தாக்கரே அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்