முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தப்படும்-ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி,மார்ச்.- 27- அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் மேலும் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் எனது ஆட்சிக் காலத்தில்தான் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. 

ஆனால் கருணாநிதி இந்த சட்டத்தை திருத்தி, தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தார் என்றாலும் அது முழுமையாக அமல்படுததப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தி அறிவிக்கப்படும். மேலும் அது முறையாக அமுல்படுத்தப்படுவது குறித்தும் என்பதும் கண்காணிக்கப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony