முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் பிரதமர் மன்மோகன்சிங் கவலை

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 17- உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்  ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்களின் மாநாட்டை நேற்று துவக்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகுந்த அச்சுறுத்தல் இருப்பதாக ஆழ்ந்த கவலை தெரிவித்தார். உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசுகளுக்கு மத்திய அரசு  உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். தீவிரவாதம், இடதுசாரி பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இன வன்முறை போன்றவை நமது நாட்டில் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது என்றும் இந்த சவால்களை சமாளிக்க நாம் மிகுந்த உஷாராகவும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். இந்த சவால்களை நாம் உறுதியுடன் சமாளிக்க வேண்டும்.  ஆனால் அதே  சமயம் மிகுந்த நுட்பத்துடன் இந்த சவால்களை சமாளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த தீவிரவாத குழுக்களுக்கு பின்னணியில் உள்ள சக்திகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, அந்த சக்திகளை பின்னோட்டம் செய்யவும் வேண்டும் என்றும் கூறினார். தீவிரவாதத்திற்கு எதிரான போர் சுமை  மாநில அரசுகளுக்குத்தான் அதிகம் இருக்கிறது. அதில்  கேள்விக்கே இடமில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்  மாநில அரசுகளுக்கு உதவி செய்வதில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். வட கிழக்கு மாநிலங்களில் இது போன்ற தீவிரவாத  சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
காஷ்மீர் மாநிலத்தில் தற்போது பாதுகாப்பு மற்றும்  சட்டம் ஒழுங்கு பிரச்சினை  ஒரளவுக்கு குறைந்து காணப்படுகிறது என்றும் இதன் காரணமாக இம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கடந்த 2011 ல் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும்  மன்மோகன் சிங் கூறினார்.
காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல்கள் சுதந்திரமாக நடைபெற்றுள்ளன. மக்கள்  வன்முறை பயமின்றி தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் வந்து போட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் வட கிழக்கு மாநிலங்களில் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது என்றும் என்றாலும் வன்முறை சம்பவங்களை பொறுத்த வரையில் கொஞ்சம் குறைவு காணப்பட்டுள்ளது என்றும்  இந்த பிரச்சினைகள்  சில இடங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன என்றும் அவற்றை ஒடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்