முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைமீது மீண்டும் கண்டன தீர்மானம்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 17 - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை மீது மீண்டும் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.  வரும் நவம்பர் மாதம் ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மீது கடந்த மாதம் ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் வாக்களித்ததால் அந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இது இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் மீறப்பட்ட மனித உரிமை குறித்து ஐ.நா. சபையில் மீண்டும் விவாதிக்கப்படவுள்ளது. இதற்கான கூட்டம் ஐ.நா.சபையில் அக்டோபர் அல்லது நவம்பரில் நடக்கவுள்ளது. அப்போது உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலைபற்றி ஆராயப்பட்டவுள்ளது. அப்போது முக்கியமாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி பேசப்படவுள்ளது. அந்த சமயத்தில் இலங்கைக்கு எதிராக மாண்டும் கண்டனம் தரிவிக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் இலங்கை தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்க அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு வரும் 23ம் தேதி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் மீது இலங்கையும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வரும் ஜூலை 23ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்படும். தங்களுக்கு எதிராக ஐ.நா. சபையில் மீண்டும் நெருக்கடியான சூழ்நிலை வருவதால் அது குறித்து சிங்களத்தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்