முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு சத்தீஸ்கார் முதல்வர் ராமன்சிங் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 17-  நக்சலைட்டுகள் விஷயத்தில் மத்திய  அரசு  கடுமையான  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  என மத்திய  அரசுக்கு சத்தீஸ்கார் முதல்வர் ராமன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்  உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மாநில முதல்வர்களின் மாநாடு  நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சத்தீஸ்கார் முதல்வர் ராமன் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், நக்சலைட்டுகளை ஓடுக்க மத்திய  அரசு கடுமையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தீவிரவாதம், நக்சல்வாதம் ஆகியவற்றை ஒடுக்க மத்திய அரசு துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இநத விஷயத்தில் தேசிய மட்டத்தில் ஒத்துழைப்பு உத்தி தேவை என்றும் அவர் கூறினார். நக்சல்வாதம் என்பது ஜனநாயக முறைக்கு எதிரானது. நக்சலைட்டுகள் கொடூரமான படுகொலைகள் மூலம்  தங்களது நக்சல்வாதத்தை பரப்பி வருகிறார்கள். மேலும் தனி நபர் சொத்துக்களை  அவர்கள் நாசப்படுத்தி வருகிறார்கள் என்றும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ராமன் சிங் கேட்டுக்கொண்டார். வன்முறைகள் மூலம் மட்டுமல்ல, கோழைத்தனமான காரியங்கள் மூலமும் நக்சலைட்டுகள் ஜனநாயக முறைகளை சீரழிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.  கூட்டாட்சி தத்துவத்தை மையமாக கொண்ட தேசியதீவிரவாத தடுப்பு மையத்தை அமைப்பதில் ஒருமித்த கருத்தொற்றுமை வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தீவிரவாதம் நக்சல்வாதம் போன்றவற்றை  மத்திய மாநில அரசுகள் ஒத்துழைப்பு முயற்சிகள் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும் என்றும் அதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் ராமன்சிங் கேட்டுக்கொண்டார்.

நக்சலைட்டுகள்,  ஆட்கடத்தலை ஒரு முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அதன் வாயிலாக அவர்கள் சில இயற்கை வளங்கள் நிறைந்த பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறார்கள் என்றும் எனவே இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிற தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை போலவே நக்சலைட்டுகளும் அதே அச்சுறுத்தலை உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் வழங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தீவிரவாதத்தால் ஏற்படுத்தப்படும் நாசத்தை காட்டிலும் நக்சல்வாதத்தால் ஏற்படுத்தப்படும்  சேதம் அதிகம் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்