முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல், சமையல்கேஸ் விலைகளை உயர்த்த ரிசர்வ் வங்கி சிபாரிசு

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஏப்.- 18 - நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்த மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி சிபாரிசு செய்துள்ளது.  ரிசர்வ் வங்கியின் வருடாந்திர நிதிக்கொள்கை அறிவிப்புகளை அவ்வங்கியின் கவர்னர் சுப்பாராவ் நேற்று மும்பையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க டீசல், மண்ணெண்ணை, சமையல் கேஸ் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு உயர்த்தலாம் என்று சிபாரிசு செய்துள்ளார். உற்பத்தியின் உண்மையான செலவை பிரதிபலிக்கும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்றும் சுப்பாராவ் கூறினார்.  பெட்ரோல் விலை சந்தை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் டீசல், மண்ணெண்ணை, சமமையல் கேஸ் ஆகியவற்றுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் மத்திய அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே இதனை ஈடுகட்ட இந்த மூன்று பொருட்களின் மீதான விலைகளை உயர்த்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் சுப்பாராவ் கூறினார். மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாகவும் உலக அளவில் பணப் புழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் 2012 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைகளின் விலை அபரிமிதமாமக அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கச்சா எண்ணை விலை பேரல் ஒன்று 120 டாலராக அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது அவசியம் என்றும் அவர் கூறினார். பெட்ரோலிய பொருட்களுக்கான மானியங்களில் குறிப்பிட தகுந்த அளவுக்கு வீழ்ச்சி ஏற்படும் என்றும் சுப்பாராவ் தெரிவித்தார். இதுபோன்ற பெட்ரோலிய பொருட்களுக்கு அதிக அளவு மானியங்களை வழங்குவதால் நாட்டின் நிதி பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.9 சதவீதமாக இருந்தது. அது நடப்பு நிதியாண்டில் 5.1 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி பற்றாக்குறையை சமாளிக்க மானியங்களை குறைப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். நடப்பு 20012-13 ஆம் நிதியாண்டில் எரிபொருட்களுக்கு அரசு வழங்கும் மானியத்தின் மொத்த தொகை ரூ. 40 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை ஈடுகட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது மிகவும் அவசியம் என்று சுப்பாராவ் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்