முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் கிங்சிற்கு 3-வது வெற்றி கிடைக்குமா? கொல்கத்தா ரைடர்சுடன் இன்று பலப்பரிட்சை

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

மொகாலி, ஏப். - 18 - ஐ.பி.எல். டி - 20 போட்டியில் இன்று மொகாலியில் நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெ ற்று உள்ளது. எனவே இந்த லீக் ஆட்ட த்திலும் வெற்றி பெற அந்த அணி முனைப்பு காட்டி வருகிறது. இன்றைய போட்டி மொகாலியில் நட ப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகு ம். எனவே பஞ்சாப் வீரர்கள் உற்சாகத் துடன் களம் இறங்க ஆயத்தமாகி வருகி ன்றனர்.  பஞ்சாப் அணி முதலில் இரண்டு லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. பின்பு மீண்டு எழுந்த அந்த அணி தொடர்ந்து இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது.  முதலில் உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது பின்பு ஈடன் கார்டனில் கடந் த புதன் கிழமை நடந்த ஆட்டத்தில் கொல்கத் தா அணியை தோற்கடித்தது.  கொல்கத்தா ரைடர்ஸ் இதுவரை 5 லீக் கிலும், பஞ்சாப் லெவன் அணி இதுவ ரை 4 லீக்கிலும் ஆடியுள்ளன. இதில் கொல்கத்தா இரண்டில் வெற்றியும், மூன் றில் தோல்வியும் பெற்று உள்ளது. பஞ்சாப் இரண்டு வெற்றியும், இரண்டு தோல்வியும் பெற்று உள்ளது.  இந்த சீசனைப் பொறுத்தவரை இந்த இரண்டு அணியிலும் உள்ள முன்வரி சை வீரர்கள் நிலைத்து சிறப்பாக ஆட வில்லை. ஒரு போட்டியில் அடித்தால் இரண்டு போட்டியில் படுத்து விடுகிறார்கள்.  பஞ்சாப் அணியின் கேப்டனான ஆடம் கில்கிறிஸ்ட் கடந்த போட்டியில் 5 ரன் எடுத்தார். அதே போல அந்த அணியி ன் ஆஸி. வீரரான ஷான் மார்ஷ் கொல் கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார்.  கடந்த வருட ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவித்த பால் வல்தாட்டி இந்த சீசனில் இதுவரை சோபிக்கவில் லை. கடந்த போட்டியில் அவர் ஆடவி ல்லை.  இருந்த போதிலும், அந்த அணியைச் சேர்ந்த மந்தீப் சிங் நல்ல பார்மில் இரு க்கிறார். கடந்த போட்டியில் டேவிட் ஹஸ்சேயும் நன்கு ஆடினார். இதனால் அந்த அணி புத்துணர்ச்சி பெற்று உள்ளது.
தவிர, பேட்டிங்கின் போது பின்வரிசை வீரர்களான பையூஸ் சாவ்லா மற்றும் பிபுல் சர்மா இருவரும் முன் வரிசை வீரர்களுக்குஆதரவாக ஆடி வருவது அந்த அணிக்கு பலமாகும்.
பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்ட
ரான அசார் மெக்மூத் ஐ.பி.எல். லில் பங்கேற்க கடந்த வாரம் விசா பெற்றா ர். அவர் கொல்கத்தா அணிக்கு எதிரா   ன ஆட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனின் துவக்கத்தில் பஞ்சாப் அணியின் பெளலிங் சற்று பலவீனமாக இருந்தது. தற்போது அந்த அணியின் பந்து வீச்சில் முன்னேற்றம் காணப்படுகிறது.
பிரவீன் குமார் அதிக விக்கெட் எடுக் காத போதிலும், பேட்ஸ்மேன்கள் அதி க ரன் எடுக்காமல் கட்டுப்படுத்துகிறா ர். அதே போல இங்கிலாந்து வீரர் மஸ் கரன்ஹாஸ் மற்றும் ஹர்மீத் பன்சால் இருவரும் நன்கு பந்து வீசி வருகின்றனர்.
இளம் பரோடா சுழற் பந்து வீச்சாள ரான பர்கவ் பட் மற்றும் ஆல்ரவுண்டர் பையூஸ் சாவ்லா இருவரும் சிறப்பாக பந்து வீசி வருவது பஞ்சாப் கேப்டனுக் கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
கொல்கத்தா அணி தரப்பில் முன் வரி சை வீரர்களான கேப்டன் காம்பீர் தெ. ஆ. வீரர் காலிஸ் இருவரும் இதுவரை நடந்த ஆட்டத்தில் ஜொலித்தனர். எனவே மற்ற வீரர்கள் அடுத்த போட்டிகளி ல் தங்களது திறனை வெளிப்படுத்த ஆயத்தமாக உள்ளனர்.
கடந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்ததற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்ட மே காரணம் என்று கேப்டன் காம்பீர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று உள்ள பதான், மனோஜ் திவாரி, மன்விந்த ர் பிஸ்லா மற்றும் ஹாலந்து ஆல்ரவுண்டர் டஸ்சாட்டே ஆகியோர் பஞ்சாப் பெளலர்களுக்கு அதிர்ச்சி அளிக்க காத்தி ருக்கின்றனர்.
மொகாலி ஆடுகளம் வேகப் பந்து வீச் சிற்கு ஏதுவானது. இதில் மே.இ. வீரர் சுனில் நரைன் மற்றும் வங்கதேச ஆல்ர வுண்டர் ஷாகிப் அல் ஹசன் ஆகியோ ரது சுழற் பந்து வீச்சு எடுபடுமா என்பது தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்