முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதர்ஸ்குடியிருப்பு கட்டப்பட்டுள்ள நிலம்ராணுவத்திற்கு சொந்தமானது அல்ல

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, ஏப். - 18 - சர்ச்சைக்குரிய  ஆதர்ஸ் குடியிருப்புக்கள் கட்டப்பட்டுள்ள நிலம்  ராணுவத்திற்கு  சொந்தமானது அல்ல என்றும் அந்த  நிலம் மகாராஷ்டிர அரசுக்கு  சொந்தமானது என்றும் இந்த குடியிருப்பு ஊழல் குறித்து  விசாரணை நடத்தி வரும் விசாரணை கமிஷன் கூறியுள்ளது. மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் ஆதர்ஷ் சொசைட்டி  சார்பில் 31 மாடிகளை கொண்ட குடியிருப்புக்கள் கட்டப்பட்டுள்ளன.  இந்த கட்டிடம் அமைந்துள்ள நிலம்  ராணுவத்திற்கு  சொந்தமானது என்றும் இந்த குடியிருப்புக்கள் இந்திய ராணுவத்தில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கும் கார்கில்  போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் மனைவிகளுக்கும்  ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும்  இந்த குடியிருப்புக்களை ஒதுக்கீடு செய்ததில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என்றும்  இந்த கட்டிடம்  சிவில் மற்றும் சுற்றுச்சூழல்  விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது என்றும் இந்த ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது என்றும் புகார்கள் எழுந்தன.  இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்  பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை கிளப்பப்பட்டது. இதை அடுத்து  இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஜே .ஏ.பாட்டீல், மகாராஷ்டிர முன்னாள்  தலைமை செயலாளர் பி.சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய  இரு நபர் விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது.  இந்த கமிஷன் தனது  இடைக்கால அறிக்கையை நேற்று  மகாராஷ்டிர மாநில அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் ஆதர்ஷ் குடியிருப்பு கட்டப்பட்டுள்ள நிலம் ராணுவத்திற்கு சொந்தமானது அல்ல என்றும் அது மகாராஷ்ட்டிர அரசுக்கு சொந்தமானது என்றும் கூறப்பட்டுள்ளது மேலும் இந்த குடியிருப்பு போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் மனைவிகளுக்கும் மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேற்று மகாராஷ்ட்ர அமைச்சரவை கூட்டத்தில் சம்ர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த அறிக்கை மகாராஷ்ட்ர சட்டசபையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்