முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை நீரை பாதுக்காக்கும் விஷயத்தில் மாநிலஅரசுகளின் ஒத்துழைப்பு தேவை

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 19 - கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் காலம்தான் கடந்து கொண்டிருக்கிறது என்றும், கங்கை நதி நீரை பாதுகாக்கும் விஷயத்தில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன்சிங், கங்கை நதி நாளுக்கு நாள் மாசடைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. அதில் தினசரி 2,900 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கலந்து மாசுபடுகிறது. கங்கை நதி நீர் பாயும் மாநிலங்கள் நதியை பாதுகாக்க அக்கறை செலுத்த வேண்டும். அந்த மாநிலங்களில் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையங்களை அமைத்து செயல்படுத்தி வந்தாலும் இன்னும் கூடுதலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும். இதற்கான திட்ட வரைவை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம். மத்திய அரசிடம் உள்ள நிதியை சரிவர பயன்படுத்திக் கொள்ள மாநிலங்கள் முன்வர வேண்டும்.  சுற்றுச்சூழலை சீர்கெடுக்கும் இது போன்ற கழிவுகளில் பெரும்பகுதி சிதையும் தன்மையற்றதாக உள்ளது. இவற்றின் தீமையின் வீரியம் குறித்து மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். விதிமுறையை மீறும் தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது தயங்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் தாமதம் கூடாது. கங்கை நதியை விரைந்து சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை. காலம்தான் வேகமாக கடந்து கொண்டிருக்கிறது. கங்கையை சுத்தப்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு ஏற்கனவே அறிக்கைகளை அளித்துள்ளது. அது ஆராயப்பட்டு வருகிறது. கங்கையை சுத்தப்படுத்துவது குறித்த திட்டவரைவு ஒன்றை அவர்கள் தயாரித்து அளிக்க வேண்டும் என்றார் பிரதமர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்