முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை எந்தநேரமும் உயரலாம் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ப்பந்தம்

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 1 9 - பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருக்க வேண்டுமானால் மத்திய அரசுக்கு 2 நிர்பந்தங்களை எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ளன. இல்லாவிட்டால் எந்த நேரத்திலும் லிட்டருக்கு ரூ. 8 வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன.  கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோலிய பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டதாகவும், அதனால் நாள்தோறும் இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன. பெட்ரோல் விற்பனை மூலம் தினந்தோறும் ரூ. 49 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக அவை தெரிவித்துள்ளன. தற்போது பெட்ரோல் விலை நிர்ணய உரிமை எண்ணெய் நிறுவனங்களிடம்தான் உள்ளது. இருந்தாலும் மத்திய அரசின் இறுதி அனுமதி தேவைப்படுகிறது. பெட்ரோலிய விற்பனையால் ஏற்படும் இழப்பை தாங்க முடியாது என்று பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்தன. ஆகவே பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 8.04 உயர்த்த முடிவு எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதனை தவிர்க்க வேண்டுமானால் 2 நிபந்தனைகளையும் அவை விதித்துள்ளன. ஒன்று, பெட்ரோல் விற்பனையால் ஏற்படும் இழப்பு ரூ. 49 கோடியை மத்திய அரசு ஏற்க வேண்டும். அல்லது பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரிகளை குறைத்து கொள்ள வேண்டும். பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 10.30 முதல் ரூ. 18.74 வரை வரி விதிக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 69 ஆகும். இதில் மத்திய அரசும் மாநில அரசும் வரியாக பாதிக்கு மேல் பெற்றுக் கொள்கின்றன. ஆகவே இநத வரியை ஓரளவு குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன. மேற்கண்ட இரண்டில் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் பிடிவாதம் பிடிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்