முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வகுப்பு கலவர தொடர்பான வழக்கு: 40 பேர் விடுதலை

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

பனாஜி, ஏப்.- 19 - கோவா மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற வகுப்பு கலவரம் தொடர்பான வழக்கில் போதுமான சாட்சியங்கள் இல்லாததால் 40 பேரை விடுதலை செய்து கோவா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவா மாநிலத்தில் மர்மகோவா மாவட்டத்தில் உள்ள சன்வோர்தம் -கர்ச்சோரம் என்ற இரட்டை நகரங்களின் புறநகர் பகுதியில் இருந்த ஒரு மதரசா இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த மதரசா சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும், அதனால் அது இடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த இரட்டை நகரத்தில் வகுப்பு கலவரம் ஏற்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற  இந்த வகுப்பு கலவரத்தின்போது  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  சொத்துக்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அங்கு குவிக்கப்பட்டது. அதன்பிறகு கலவரம் அடங்கியது. இந்த கலவரம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வழக்கு விசாரணை மர்மகோவா செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க. பொதுச் செயலாளர் சதீஷ் தோண்டு மற்றும் மூத்த தலைவர்களின் ஒருவரான சர்மாத் ராய்துர்கர் ஆகியோர் உள்பட 40 குற்றவாளிகள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் போதுமான சாட்சியங்கள் இல்லை என்றும் கூறி அவர்கள் 40 பேரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago