முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினை பசுக்களை வதை செய்ய கேரளாவில் தடை வருகிறது

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஏப்.- 19  - சினை பசுக்களை வதை செய்வதை தடை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எல்லோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பசுக்களை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். ஆனால் பல மாநிலங்களில் உணவுக்காக பசுக்கள் வதை செய்யப்படுகிறது. இதற்கு பாரதிய ஜனதா மற்றும் இந்துமத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு ஓரளவுக்கு செவி சாய்க்கும் வகையில் சினை பசுமாடுகளை வதை செய்வதை தடை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையல் காங்கிரஸ் கூட்டணியின் கேபினட் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் உம்மன் சாண்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சினை பசுமாடுகளை வதை செய்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதற்கான அறிவிப்பு வெளியிடுவதோடு தேவையான சட்டத்திருத்தமும் கொண்டுவரப்படும் என்றார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்