முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஞ்ஞானிகளுக்கு மன்மோகன்சிங் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.20 - அக்னி 5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்த இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தின் சார்பில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை சோதனை நேற்று ஒரிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள வீலர்ஸ் தீவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5000 கி.மீட்டர் வரை சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அணு ஆயுத ஏவுகணை சோதனை வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் ஆகியவற்றை பலப்படுத்த ஓய்வில்லாமல் உழைத்த விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

அறிவியல் துறையில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், ராணுவத்தை எப்போதும் ஆயத்த நிலையில் வைக்கவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டுக்கு பெருமைசேர்த்த இந்திய விஞ்ஞானிகளின் இந்த பங்களிப்பிற்கு இந்த தேசமே ஒன்றுபட்டு மரியாதை செய்கிறது  என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றிக்கு காரணமாக உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கழக டைரக்டர் ஜெனரலுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் அந்த செய்தியில் கூறியுள்ளார். 

இதேபோல துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும் இந்திய விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் தனது வாழ்த்துக்களை இந்திய விஞ்ஞானிகளுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்