முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.: கொல்கத்தா பஞ்சாப் லெவனை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, ஏப். 20 - 5 -வது ஐ.பி.எல். 20 -க்கு 20 கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் காம்பீர் அதிரடியாக ஆடி, அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக்கு பக்கபலமாக காலிஸ் மற்றும் மெக்குல்லம் இருவரும் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பிரட்லீ மற்றும் சுழற் பந்து வீச்சாளர் நரைன் இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் வீழ்த்தி பஞ்சாப் அணியின் ரன்ரேட்டைக் கட்டுப் படுத்தினர். 

5-வது ஐ.பி.எல். டி - 20 போட்டியில்   மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் 22 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும், கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெ ட்டை இழந்து 124 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

கேப்டன் கில்கிறிஸ்ட் பொறுப்புடன் ஆடி, 30 பந்தில் 40 ரன்னை எடுத்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய ஷான் மார்ஷ் 30 பந்தில் 33 ரன்னை எடுத்தார். தவிர, டி. ஹஸ்சே 10 ரன் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில், முன்னணி வீரரான பிரட்லீ 26 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். சுனில் நரைன் 24 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பாலாஜி மற்றும் பாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

கொல்கத்தா அணி 125 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 16.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்னை எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி இந்த லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் காம்பீர் அதிரடியாக ஆடி 44 பந்தில் 66 ரன்னை எடுத்து அணியை வெற்றிப் பா

தைக்கு அழைத்துச் சென்றார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். அவர் இறுதிவரை ஆட்டம் இழக்காம

ல் இருந்தார். 

அவருடன் இணைந்து ஆடிய காலிஸ் 23 பந்தில் 30 ரன்னை எடுத்து இறுதிவ ரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். மெக்குல்லம் 15 ரன்னிலும், பிஸ் லா 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பஞ்சாப் அணி சார்பில், முன்னணி சுழ ற் பந்து வீச்சாளரான பையூஸ் சாவ்லா 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். பிரவீன் குமார், மஸ்கரன்ஹாஸ் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக காம்பீ ர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்