ராமர் கோயிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதம்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

லக்னோ,ஏப்.20 - அயோத்தியில் ராமர் கோயிலை குண்டுவைத்து தகர்க்கப்போவதாக பைசாபாத் மாவட்ட நீதிபதி ராமவிரகாஷ் யாதவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் உள்ளது. இந்த கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதனால் கோயிலுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் ராமர் கோயிலையும் மாவட்ட நீதிமன்றத்தையும் குண்டுவைத்து தகர்க்கப்போவதாக மர்ம ஆசாமி ஒருவர் கையால் எழுதி சாதாரண தபாலில் அனுப்பியுள்ளார். நீதிபதி யாதவ் அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையொட்டி ராமர்கோயிலுக்கு மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மிரட்டல் குறித்து பைசாபாத் டி.ஐ.ஜி. பானுபாஸ்கர் கூறுகையில், ராமர் கோயிலைத் தகர்க்கப்போவதாக அடிக்கடி மிரட்டல் கடிதம் வருகிறது. அதேசமயத்தில் அனைத்து மிரட்டல் கடிதங்களையும் கவனமாக பரிசீலித்து ராமர் கோயிலுக்கும் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று டி.ஐ.ஜி. பானுபாஸ்கர் மேலும் கூறினார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: