முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, ஏப். 20 - 5-வது ஐ.பி.எல். போட்டியில் மொகா லியில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ் சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவ ன் அணியும் மீண்டும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மே.இ.தீவின் அதிரடி வீரர் கெய்ல் அட்டகாசமாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பார்ம் கண்டு பஞ்சாப் லெவன் அணி கலக்கம் அடைந்துள்ளது. கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமை யிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவ ரை நடந்த லீக் ஆட்டத்தில் 3 முறை தோல்வி அடைந்துள்ளது. கொல்கத் தா அணியிடம் உள்ளூர் போட்டியிலே யே தோற்றது. 

கடைசியாக நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியா சத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. 

ஆனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர் ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் சிறப் பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரு கிறது. இதற்கு முந்தைய போட்டியில் அந்த அணி புனே வாரியர் ஸ் அணியை புத்தி சாதுர்யமாக தோற்கடித்தது. 

இந்தப் போட்டியில் மே.இ.தீவு வீரர் கெய்ல் அதிரடியாக ஆடினார். அவர் 48 பந்தில் 81 ரன்னை எடுத்தார். இதில் 8 சிக் சர் அடக்கம். ஒரு ஓவரில் மட்டும் அவ ர் 5 சிக்சர் அடித்தது குறிப்பிடத்தக்கது. கெய்லின் அதிரடியால் பெங்களூர் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் பெங் களூர் ராயல்ஸ் அணிகள் இதுவரை 5 லீக்கில் விளையாடியுள்ளன. புள்ளிகள் தரப்பட்டியலில் முறையே 7 - வது மற் றும் 8 -வது இடத்தில் உள்ளன. ஆனால் பெங்களூர் அணி இந்தப் போட்டியில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் களம் இற ங்குகிறது. 

பஞ்சாப் அணி முதல் இரண்டு லீக்கில் தோல்வி அடைந்தது. பின்பு அடுத்த இரண்டு லீக்கில் தொடர்ந்து வெற்றி பெற்றது. பின்பு கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந் தது. 

பஞ்சாப் அணியில் முன்னணி பேட்ஸ் மேன்களின் பார்ம் நிலையாக இல்லை . கேப்டன்ஆடம் கில்கிறிஸ்ட் இதுவ ரை சரியாக ஆடவில்லை. கடைசியாக நடந்த ஆட்டத்தில் அவர் 40 ரன் எடுத் தார். இதுவே இந்த சீசனில் அவர் அடி த்த அதிகபட்ச ரன்னாகும். 

அதே போல சகநாட்டவரான ஷான் மார்சும் இதுவரை தனது முழுத் திறமை யை 5-வது ஐ.பி.எல். லில் வெளிப்படு த்தவில்லை. கடந்த வருட ஹீரோவான பால் வல்தாட்டியும் மோசமாக ஆடி வருகிறார். அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம். 

பஞ்சாப் அணியின் பேட்டிங் பலம் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் மற்றும் டேவிட் ஹஸ்சே ஆகியோரை மைய மாகக் கொண்டே உள்ளது. இதில் கில் கிறிஸ்டின் பார்ம் கவலை அளிக்கிறது. 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரலவுண்டரான அசார் மெக்மூத் பஞ்சாப் அணியில் விளையாட இருக்கிறார். அவர் இந்த அணியில் விளையாடுவதற் காக மல்டி சிட்டி விசா பெற்று இருக்கிறார். 

பஞ்சாப் அணியின் பெளலிங்கில் இங் கிலாந்து வீரர் மஸ்கரன்ஹாஸ், பிரவீன் குமார், ஹர்மீத் பன்சால் மற்றும் பையூஸ் சாவ்லாஆகியோர் இடம் பெற்று உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை நடந்த லீக்கில் முத்திரை பதிக்கவில் லை. 

பெங்களூர் அணி தரப்பில் விராட் கோக்லி நன்கு ஆடி வருகிறார். அவர் 5 போட்டியில் பங்கேற்று மொத்தம் 109 ரன்னை எடுத்து இருக்கிறார். இதில் செ ன்னை அணிக்கு எதிராக அவர் 57 ரன் எடுத்தது நினைவு கூறத்தக்கது. 

டிவில்லியர்ஸ் ஒரு சில போட்டிகளில் மோசமாக ஆடினார். பின்பு வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக்கில் அவர் பார் முக்கு திரும்பி 33 ரன் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டம் பெங்களூர் அணிக்கு உதவியாக இருக்கும். 

பெங்களூர் பெளலிங்கில் ஜாஹிர்கான் மற்றும் கேப்டன் டேனியல் வெட்டோரி மற்றும் முத்தையா முரளீதரன் ஆகியோர் உள்ளனர். வெட்டோரி அதி க விக்கெட் எடுக்காத போதிலும், சிக்க னமாக பந்து வீசி எதிரணி வீரர்களை திணற வைத்து வருகிறார். 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் ஆட்டம் மொகாலியில் இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி 8 மணிக்கு துவங் குகிறது. செட் மேக்ஸ் சேனலில் நேரடி யாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்