முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்ராகிம் ராவுத்தர் பாதுகாப்பு கோரி ஐகோர்ட்டில் வழக்கு

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப். 20 - இப்ராகிம் ராவுத்தர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் வழக்குதொடுத்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்காலிக தலைவர் இப்ராகிம் ராவுத்தர் எதிரணியினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே புகார் மனு அளித்து தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தார். ஆனால் அதன் மீது இது வரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நேற்று சென்னை ஐகோர்ட்டில் அவர் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே நான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுத்து எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!