சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூட்டம்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.20  - மதுரையில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவில் மேற்கொள்ளப்படவேண்டிய சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் தலைமையில் நடைபெற்றது.மதுரையில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவில் மேற்கொள்ளப்படவேண்டிய சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கர்னல்.ஜான் பென்னிகுயிக் கூட்டரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:

மதுரை மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சித்திரை பெருவிழா 2012 சிறப்பான முறையில் மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது.  பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்த வேண்டியது நம் அனைவரது கடமை.  குறிப்பாக அருள்மிகு.மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயிலில் 23.04.2012 அன்று கொடியேற்றம் தொடங்கி 04.05.2012 வரையிலும் அதேப்போல அருள்மிகு.கள்ளழகர் திருக்கோயிலில் 02.05.2012 முதல் 11.05.2012 வரையிலும் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளது.  இத்திருவிழாவின் போது அருள்மிகு.கள்ளழகர் 04.05.2012ம் தேதி அழகர்கோயிலிலிருந்து புறப்பட்டு 06.05.2012 அன்று காலையில் வைகையாற்றில் இறங்கி மதுரை வண்டியுர்ை வரை சென்று திரும்பவும் 10.05.2012ம் தேதி அழகர்கோயில் வந்தடைகிறார்.  இந்த சித்திரை திருவிழா அமைதியாகவும், பாதுகாப்பாகவும், சட்ட ஒழுங்கிற்கு எந்தவித குந்தகமுமின்றி நடைபெற காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மிகவும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

திருக்கல்யாணத்தன்று பொது மக்களுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.  இதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என்று உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பரிசோதனை செய்த பிறகே பொதுமக்களுக்கு உணவு பரிமாறப்பட வேண்டும்.  போதுமான அளவில் மருந்துகள் இருப்பு வைத்தல், மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாக அலுவலர், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் இணைந்து தேரோட்டம் நடைபெறும் நான்கு மாசி வீதிகளிலும் கூட்டுப் புலத்தணிக்கை செய்து எந்தெந்த இடங்களில் சாலைகள் பழுதடைந்து உள்ளது என்பதை கண்டறிந்து தேரோட்டம் தங்கு தடையின்றி நடைபெறும் வகையில் சாலைகளை செப்பனிட வேண்டும்.

போக்குவரத்து துறையினர் திருவிழா காலங்களில் காவல்துறையினருடன் கலந்து ஆலோசித்து தேவையான பேருந்து வசதிகள் செய்ய வேண்டும்.  மின்சாரத்துறையினர் தேரோட்டத்தின் போது உரிய சமயத்தில் மட்டும் மின்நிறுத்தம் செய்து, குறுக்கே செல்லும் மின்கம்பிகளை தேரோட்டத்தின் போது அகற்றி தகுந்த ஏற்பாடுகள் செய்யும் பொருட்டு மின் வாரிய அலுவலர்கள் குழுவும் உடன் செல்ல வேண்டும்.  தேவையான இடங்களில் போதுமான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ்டுபடுத்தப்படவேண்டும்.  கோயில் வளாகங்களில் பக்தர்கள் வருகையை முறைப்படுத்த ஆங்காங்கே பலமான தடுப்புகளை இந்து சமய அறநிலையத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.  விழாக்காலங்களில் பொது சுகாதாரத்தை பேணும் பொருட்டு முக்கிய இடங்களில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள், சின்டெக்ஸ் தொட்டிகளுடன் கூடிய குடிநீர் குழாய்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திடல் வேண்டும் என்றார்.      

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ராகார்க்,இ.கா.ப., சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் திருநாவுக்கரசு, மதுரை வருவாய் கோட்டாட்சியர் .துரைராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .அலிஅக்பர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் துணை ஆணையர் செல்வராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தனபால், போக்குவரத்துதுறை பொது மேலாளர் திரு.சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவ அலுவலர் பிரகதீஸ்வரன், சுற்றுலாத்துறை அலுவலர் தர்மராஜ், வடக்கு வட்டாட்சியர் அலெக்ஸாண்டர்ராய் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: