முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 255 புதிய துணை மின் நிலையங்கள்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.20 - தமிழ்நாட்டில் 255 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பதில்கள் வருமாறு:- தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. இதன் அடிப்படையில் புதிய துணை மின் நிலையங்களை அமைக்க முதல்​அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.15 ஆயிரத்து 320 கோடி செலவில் 255 துணை மின் நிலையங்கள் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. தலா ரூ.250 கோடி செலவில் 400 கிலோ வாட் துணை மின் நிலையம் 15​ம், ரூ.2700 கோடி செலவில் 230 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் 40​ம், ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் 200​ம் அமைக்கப்படும். இது தவிர 25 துணை மின் நிலையங்களை திறன் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். அது போன்ற வாய்ப்புள்ள இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்