முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கிங்ஸ் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப். - 21 - 5 -வது ஐ.பி.எல். 20-க்கு 20 போட்டியி ல் சென்னையில் நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங் ஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது  இந்தப் போட்டியில் சென்னை அணி தரப்பில், டுபிளீசஸ், பத்ரிநாத், இருவ ரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித் து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்த னர். கேப்டன் தோனி அவர்களுக்கு பக் கபலமாக ஆடினார். பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளரான குலசேகரா மற்றும் டி. பிராவோ இருவரும் சிறப் பாக பந்து வீசி தலா 2 விக்கெட் வீழ்த் தினர். அவர்களுக்கு ஆதரவாக பொலி ஞ்சர், அஸ்வின் மற்றும் ஜகாதி ஆகி யோர் பந்து வீசினர். 5 -வது ஐ.பி.எல். போட்டியின் 24 -வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தி ல் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத் தில் நடந்தது. இதில் கேப்டன் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும், கேப்டன் தோனி தலைமை யிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெ ட் இழப்பிற்கு 164 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் அரை சத மும், ஒருவர் கால் சதமும் அடித்தனர். 

இந்தப் போட்டியில் துவக்க வீரர்களாக இறங்கிய டுபிளீசஸ் மற்றும் பத்ரிநாத் இருவரும் நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். இதனை பின்னர் வந்த வீரர்கள் நன்கு பயன்படுத்தியதால் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. 

டுபிளீசஸ் அதிகபட்சமாக, 48 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். பத்ரிநாத் 48 பந்தில் 57 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். கேப்டன் தோனி 12 பந்தில் 28 ரன்னையும், டி.பிராவோ 12 ரன்னையும் எடுத்தனர். 

புனே வாரியர்ஸ் அணி தரப்பில், முன் னணி வேகப் பந்து வீச்சாளரான மார் லான் சாமுவேல்ஸ் 39 ரன்னைக் கொடு த்து 3 விக்கெட் எடுத்தார். நெக்ரா 23 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். 

புனே வாரியர்ஸ் அணி 165 ரன்னை எடு த்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை சென்னை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்னை எடுத் தது. 

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த லீக்கில் 13 ரன் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

புனே அணி தரப்பில், ஆல்ரவுண்டர் மேத்யூஸ் அதிகபட்சமாக, 22 பந்தில் 28 ரன்னை எடுத்தார். தவிர, சாமுவேல்ஸ் 26 ரன்னையும், கேப்டன் கங்குலி 24 ரன் னையும், எஸ். ஸ்மித் 23 ரன்னையும் எடுத்தனர். 

சென்னை அணி சார்பில், குலசேகரா 10 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். டி.பிராவோ 28 ரன்னைக் கொடு த்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பொ லிஞ்சர், அஸ்வின் மற்றும் ஜகாதி ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக குலசேகரா தேர்வு செய்யப்பட்டார். 

------------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்