முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தத்திற்கு வாய்ப்புகுறைவு

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஏப்.-21 - இந்தியாவில் வரும் 2014-ம் ஆண்டிற்கு முன்பாக பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இல்லை என்று சர்வதேச நிதியுதவி ஸ்தாபன பொருளாதார ஆலோசகர் கெளசிக் பாசு தெரிவித்துள்ளார். வாஷிங்டன்னில் நடைபெற்ற பொருளாதார மேதைகளின் கூட்டத்தில் கெளசிக் பாசு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரையில் பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இருக்காது என்றார். தேர்தலுக்கு பின்னர் இந்தியா உலகில் வேகமாக பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்றும் பாசு தெரிவித்தார். அதற்கு முன்பு பாராளுமன்றத்தில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும் அவைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. அதேசமயத்தில் சில்லறை விற்பனை போன்ற சில துறைகளில் உடனடியாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் கொடுக்கப்படும் மான்யத்தை கட்டுப்படுத்தவும் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும் இந்தியாவுக்கு கட்டாயமாகிவிட்டது. இந்தியாவில் வரும் பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அடுத்து அமையும் அரசு பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. புதிய அரசுக்கு முழு மெஜாரிட்டி இருந்தால் பொருளாதார சீர்திருத்தம் விரைவாக இருக்கும் என்றும் பாசு கூறினார். உலக வங்கி கூட்டத்திலும் பாசு கலந்துகொள்ள உள்ளார். அவருடன் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சென்றுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்