முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் முன் ஜாமீன் தள்ளுபடி

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 21 -  பிரமோத் குமார் ஐபிஎஸ் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்தமனுவை விசாரித்த நீnullதிபதி, பிரமோத் குமார் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கோவை மண்டல ஐ.ஜி.யாக இருந்தவர் பிரமோத்குமார். அப்போது, பொது மக்களிடம் 1000 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக பாசி நிதி நிறுவனம் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அப்போது ஐ.ஜி.யாக இருந்த பிரமோத் குமார் விசாரித்து வந்தார். இந்த நிலையில் பணம் வாங்கிக் கொண்டு பாசி நிறுவனத்தை காப்பாற்ற முயற்சித்ததாக பிரமோத்குமார் மீது புகார் எழுந்தது.இந்த நிலையில் சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐ.ஜி.யாக பிரமோத்குமார் உள்ளார். இதனிடையே பிரமோத்குமாரின் சென்னை கோயம்பேடு வீட்டிலும், பீகார் வீட்டிலும் கடந்த மாதம் மார்ச் 12 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் பாசி நிதி நிறுவனத்துக்கு உதவி செய்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஐ.ஜி. பிரமோத்குமார் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீnullதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று உயர் நீnullதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐ.ஜி. பிரமோத்குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே மோசடி செய்த விவகாரத்தில் வட மாநிலத்தில் பதுங்கி இருந்த பாசி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்