சிறுவன் தில்சனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரிக்கு ஆயுள்தண்டனை

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 21 - சென்னையில் பழம் பறிக்க சென்ற சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை விரைவு nullநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தீவு திடல்அருகே  இந்திரா நகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தில்சன்(13).கடந்த ஆண்டு ஜூலை 3​ஆம் தேதி  இவன்  அங்குள்ள ராணுவ குடியிருப்பில் பாதாம்  கொட்டை பறிக்கச் சென்ற போது, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தனது வீட்டின் பால்கனியில் இருந்து சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர். இதில் இராணுவ அதிகாரி சம்பந்தப்பட்டு இருப்பதால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி. சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. ஸ்ரீதர், சூப் பிரண்டுகள் சந்திரபாசு, சோனல் மிஸ்ரா ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா நகர் அருகே ராணுவ குடியிருப்பு உள்ளது. போலீஸார் அங்கு சென்று சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவன் சுடப்பட்டதற்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை என்று ராணுவ தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அறிவியல் ரீதியாகவும் 100​க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் அடிப்படையிலும் நடத்திய விசாரணையில் சிறுவனை சுட்டது இராணுவ அதிகாரி தான் என்ற முடிவுக்கு வந்தனர். சிறுவனை சுட்ட வீட்டில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ராமராஜ் பாண்டியன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரிடம் விசாரித்த போது தனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தார். தனக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு இருப்பதாக கூறினார். இதனால் போலீஸார் அவரது செல்போன் நம்பரை மட்டும் வாங்கிக் கொண்டனர். அவரை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்க திட்டமிட்டனர். அவரது செல்போன் நம்பரை வைத்து சம்பவம் நடந்த அன்று அவர் எங்கு இருந்தார் என்பதை பார்த்தனர். சம்பவம் நடந்த நேரத்தில் அவரது செல்போன் நம்பர் அதே பகுதியை காட்டியது. சம்பவம் நடந்த அன்று இரவில் நேப்பியர் பாலம் வரை சென்றதையும் செல்போன் டவர் காட்டியது. இதனால் ராமராஜ் பாண்டியன் மீது போலீஸுக்கு சந்தேகம் வலுத்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தங்களிடம் சிக்கிய ஆதாரங்களை காட்டி சரமாரியாக கேள்விகள் கேட்டு விசாரித்தனர். வேறு வழியின்றி தில்சனை சுட்டுக் கொன்றது நான் தான் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, தில்சனை சுட்டுக் கொன்றதாக முன்னாள் ராணுவ அதிகாரி ராமராஜ் கைது செய்யப்பட்டார். சிறுவனை சுட்டு கொன்றது குறித்து ராமராஜ் பாண்டியனிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ராணுவத்தில் மெக்கானிக்கல் பிரிவில் என்ஜினீயராக பணிபுரிந்து கடந்த ஏப்ரல் மாதம்தான் ஓய்வு பெற்றார். சொந்த ஊர் மதுரை. இரண்டரை வருடங்களாக தீவுத்திடல் அருகே ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தார். இராணுவ குடியிருப்பும், சிறுவன் தில்சன் வசித்து வந்த குடிசைப் பகுதியும் அருகருகே உள்ளது. தில்சான் மற்ற சிறுவர்களுடன் இராணுவ மைதானத்துக்கு வந்து விளையாடுவான். மாங்காய் பறிப்பது, பாதாம் கொட்டைக்காக மரத்தில் கல் எறிவது, சுவர் ஏறி குதிப்பது போன்ற செயலில் ஈடுபட்டனர். அவர்கள் போடும் சத்தம் ராமராஜ் பாண்டியனுக்கு இடையூறாக இருந்தது. பகலில் அவரால் தூங்க முடியவில்லை. இந்த வெறுப்பில் சிறுவனை சுட்டதாக ராமராஜ் தெரிவித்துள்ளார். சிறுவனை சுட்டதும் வீட்டில் குளியலறையில் சிறிது நேரம் பதுங்கி இருந்தார். பின்னர் வெளியில் வந்து பார்த்தபோது அங்கு மறியல், அதிகாரிகள் விசாரணை என்று பரபரப்பாக இருந்தது. ராமராஜ் பாண்டியன் ஒன்றும் தெரியாதவர் போல் வந்து அதிகாரிகளிடம் நடித்து விட்டுச் சென்றார். அதன் பிறகு இரவில் காரை எடுத்துக் கொண்டு நேப்பியர் பாலம் சென்று அங்கு கூவத்தில் தனது ரைபிள் துப்பாக்கியையும் துப்பாக்கி குண்டுகளையும் வீசி விட்டு சென்றார்.

தீயணைப்பு அதிகாரி வேலாயுதம் தலைமையில் வீரர்கள் கூவத்தில் படகில் சென்று இறங்கி ராமராஜ் பாண்டியன் வீசிய இடத்தில் துப்பாக்கியை தேடினர். ராம்ராஜ் பாண்டியனையும் உடன் அழைத்துச் சென்றனர். அவர் துப்பாக்கியை வீசிய இடத்தை காட்டினார். அவர் நேப்பியர் பாலத்தில் இருந்து வீசிய வேகத்தில் அது செங்குத்தாக சென்று சகதியில் செருகி இருந்தது. இதனால் துப்பாக்கி தேடிய உடனே எளிதில் கிடைத்து விட்டது. துப்பாக்கி சிக்கியதும் ராமராஜ் பாண்டியன் இப்படி தவறு செய்து விட்டேனே என்று தலையில் அடித்து கதறினார். அது 0.3 எம்.எம். வெளிநாட்டு துப்பாக்கியாகும். ஜலப்nullரில் இருந்தபோது உறவினர் முகவரியை கொடுத்து தன் பெயரில் அந்த துப்பாக்கிக்கான லைசென்சை பெற்று இருப்பதும் தெரிய வந்தது.

பின்னர்  கைதான கர்னல் ராமராஜ் பாண்டியன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.   இந்த வழக்கில் விரைவில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன் பின்னர் இந்த வழக்கு சென்னை 5-ம் விரைவு கோர்ட்டுக்கு தில்சான் கொலை வழக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கின் சாட்சி விசாரணை 5ம் விரைவு கோர்ட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ந் தேதி தொடங்கியது. இந்த வழக்கு சென்னை விரைவு நீnullதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி ராதா விசாரித்தார். அரசுத் தரப்பின் முதல் சாட்சியாக   தில்சனின் தாயார் சாட்சி அளித்தார். இந்த நிலையில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து கடந்த 2 வாரமாக வக்கீல் வாதம் நடந்தது. கடந்த 11 ஆம் தேதிதான் வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று நீnullதிபதி ராதா அறிவித்து இருந்தார். சரியாக 11.30 மணி அளவில் புழல் சிறையில் இருந்து ராணுவ அதிகாரி ராமராஜ் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டு நீnullதிபதி ராதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீnullதிபதி, ராமராஜிடம் தண்டனை பற்றி ஏதாவது  சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு , இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார். அப்போது  nullநீதிபதி, வழக்கு பற்றி கேட்கவில்லை. கொடுக்க போகும் தண்டனை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்.  நான் நிரபராதி என்றார்  ராமராஜ். உடனே, அதுபற்றி விசாரணை யெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது தண்டனை குறுத்து என்ன கூறுகிறீர்கள்? என்று நீnullதிபதி கேட்டார். அதற்கு  ராமராஜ், நான் குற்றவாளி கிடையாது. 40 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். இந்த குற்றத்தை நான் செய்ய வில்லை  என்று தெரிவித்தார்.

இதையடுத்து nullநீதிபதி ராதா தீர்ப்பு கூறினார். சிறுவன் தில்சனை கொலை செய்த குற்றத்துக்காக குற்றவாளி ராமராஜிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ஆயுத சட்ட பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் மற்றும் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுவதாகவும், இவை ஒரே தண்டனையாக்கப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த குற்றச்செயலுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் தனது  தீர்ப்பில் கூறினார். அபாரத தொகை  ரூ.60 ஆயிரத்தில்  ரூ.50 ஆயிரத்தை கொலை செய்யப்பட்ட தில்சனின் தாயாருக்கு கொடுக்க வேண்டும் என்று nullநீதிபதி ராதா உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பையடுத்து ராணுவ அதிகாரி ராமராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.  

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: