முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆ.வுக்கு எதிரான 3 -வது காலிறுதி காலிஸ் அவுட் திருப்புமுனையாக அமைந்தது - ஓரம்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். 27 - 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் நடந்த தென் ஆப் பிரிக்காவுக்கு எதிரான 3 - வது காலிறுதிப் போட்டியில் காலிஸ் அவுட் ஆனது திருப்புமுனையாக அமைந்தது என்று நியூசிலாந்து வீரர் ஜே க்கப் ஓரம் தெரிவித்தார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் நேற்று முன் தினம் நடந்த 3 -வது காலிறுதி ஆட்டத்தில் தெ. ஆ. அணி அதிர்ச்சிகரமாக நியூசிலாந்து அணியிடம் தோற்றது. 

கேப்டன் டேனியல் வெட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணி இறுதியில் 49 ரன் வித்தியாசத்தில் தெ. ஆ. அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. 

வங்காளதேசத்தில் டாக்கா அருகே உள்ள மிர்பூரில் நடந்த இந்த காலி றுதியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது. 

நியூசி. அணியின் முன்னணி வீரரான ரைடர் 83 ரன்னும், டெய்லர் 43 ரன்னும் வில்லியம்சன் 38 ரன்னும் எடுத்தனர். மார்னே, மார்கெல், தலா 3 விக்கெட்டும், ஸ்டெயின், இம்ரான் டாகீர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 43.2 ஓவரில் 172 ரன்னில் சுருண்டது. அந்த அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன் என்ற சிறப் பான நிலையில் இருந்து பின்பு பரிதாபமான நிலைக்கு சென்றது. 

நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சால் விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணியின் கடைசி 7 விக்கெட்டுகள் 69 ரன்னில் சரிந்தன. காலிஸ் 47 ரன்னில் அவுட்டானார். அவரது கேட்ச்சை ஜேக்கப் ஓரம் பிடித்தார். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனை. 

ஜேக்கப் ஓரம் 39 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அவர் இறுதியில் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். நாதன் மெக்குல்லம் 3 விக்கெட் கைப்பற்றினார். 

இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து தென் ஆப்பிரிகக்கா அணி கேப்டன் ஸ்மித் கூறியதாவது - தோல்வியை விவரிப்பது கடினம். இந்த தோல் வியை என்னால் எப்படி உணர்வது என்றே தெரியவில்லை. மிகுந்த ஏமாற்றம் அளித்தது. 

எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ரைடர் சிறப்பாக விளையா  டினார். ஆனால் 220 ரன் என்பது எளிதான இலக்குதான். ஒரு கட்டத் தில் நாங்கள் 2 விக்கெட்டுக்கு 100 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தோம். 

ஆனால் அதன்  பிறகு எங்களது விக்கெட்டுகள் மளமளவெனறு சரிந்து விட்டன. நாக் அவுட்டில் எங்களது தோல்வி தொடர்கிறது. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் விரக்தியுடன் கூறினார். 

இந்தப் போட்டியோடு ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அவர் அறிவித் து இருந்தார். 

ஆட்டநாயகன் விருது பெற்ற நியூசிலாந்து வீரர் ஜேக்கப் ஓரம் கூறிய தாவது - காலிஸ் அடித்த பந்தை நான் கேட்ச் பிடித்தேன். அவரது அவு ட் தான் ஆட்டத்தின் திருப்புமுனை. நான் ஓடிக்கொண்டே இந்த கேட்ச்சை பிடித்தேன். 

எனது உயரத்துக்குத்தான் (6 அடி 5 அங்குலம்) நன்றி சொல்ல வேண்டும். நான் கேட்ச் பிடித்த பகுதியில் முதலில் வில்லியம்சன் (4 அடி 6 அங்குலம் ) நின்றார். பின்னர் தான் நான் அந்த இடத்துக்கு மாற்றப்ப ட்டேன். 

அடுத்து டிவில்லியர்சை குப்டில் ரன் அவுட் செய்தது மற்றொரு திருப் புமுனையாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார். நியூசிலாந்து அணி அரை இறுதியில், இலங்கை அல்லது இங்கிலாந்தை சந்திக்கும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago