முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆய்வு செய்த பின்னரே மருத்துவ மனைகள் தேர்வு

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - தரம் மற்றும் தகுதியினை ஆய்வு செய்த பின்னரே அவை முதல்வரின் புதிய ஒருங்கிணைந்த காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன என்று, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய் கூறினார்.சட்டபேரவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் விஜய் அளித்த பதில் களும் வருமாறு:

 

அமைச்சர் வி.எஸ்.விஜய் பதில்: 

 

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எந்த ஒரு பாகுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைத்து மருத்துவமனைகளுக்கும், பட்டியல் இனத்தவர் நடத்தும் மருத்துவமனைகள் உட்பட, அம்மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் தகுதிகளும், தரமும் பெற்றிருப்பின் அவை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனம் மடூடுசிடீக்ஷ ஐடூக்ஷடுஹ ஐடூஙூசீஙுஹடூஷடீ நிறுவனம், மருத்துவமனைகளின் அனுமதி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உஙிஙீஹடூடீடுஙிடீடூசி ஹடூக்ஷ க்ஷடுஙூஷடுஙீங்டுடூஹஙுநீ இச்ஙிஙிடுசிசிடீடீ ஒப்புதல் பெற்று மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

டாக்டர் க.கிருஷ்ணசாமி கேள்வி:

 

தமிழ்நாடு முதலமைச்சர் கனவுத் திட்டங்களில் ஒன்றான ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ரூ.760 கோடி ரூபாய் செலவில் அமலாக்கப்படுகிறது. இந்த ரூ.750 கோடி ரூபாயில் நஙீடீஷடுஹங் இச்ஙிஙீச்டூடீடூசி டங்ஹடூ என்று அழைக்கப்படும் உட்கூறு திட்டத்திலிருந்து மட்டுமே ரூ.250 கோடி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு மூன்றிலே ஒரு பகுதி நிதி நஇட சிறப்பு உட்கூறு திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டும் கூட, கடந்து ஆட்சியிலே ஏறக்குறைய 2,000 -க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டும், ஒரு மருத்துவமனைகூட எண்ணற்ற தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சார்ந்த மக்கள் நடத்தக்கூடிய மருத்துவமனைக்கு அந்தப் பட்டியலியே சேர்க்கப்படாத ஒரு அவல நிலை இருந்தது. அதனுடைய அடிப்படையில் இந்த கேள்வி எழுந்தது.

நமது ஆட்சியிலே தவறு நடக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. ஏனென்று சொன்னால், இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் - அரசு நேரடியாக பயனாளிகளைத் தேர்வு செய்வதில்லை. மடூடுசிடீக்ஷ ஐடூக்ஷடுஹ ஐடூஙூசீஙுஹடூஷடீ இச்ஙிஙீஹடூநீ என்ற நிறுவனம் தேர்வுசெய்கிறது. அவர்கள் ஊஙுஹடூஷகீடுஙூடீ​ஐ வேறு சில நிறுவனங்களுக்குக் கொடுக்கிறார்கள். அவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று சொன்னால், மருத்துவமனைகளைத் தரம் பிரிக்கின்றபோது, வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று தரம் பிரித்து ஒதுக்கிவிடுகிறார்கள். எனவே, அதுபோன்ற தவறுகள் நடைபெறாவண்ணம், எதனடிப்படையில் இந்த மருத்துவமனைகளைத் தரம் பிரிக்கப்படுகின்றன என்பதை அமைச்சர் வாயிலாக நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

 

பேரவைத் தலைவர்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய் - பதில்:

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் மடூடுசிடீக்ஷ ஐடூக்ஷடுஹ ஐடூஙூசீஙுஹடூஷடீ நிறுவனம் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சேர்ந்த ஒரு குழு அமைத்து, மருத்துவமனைகளை ஆய்வு செய்து, அடிப்படைத் தகுதிகள் இருக்கும் இம்மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அடிப்படை வசதிகளாக 30 படுக்கை வசதி, 5 படுக்கைகொண்ட தீவிர நோய் சிகிச்சைப் பிரிவு, ஐஇம ஆகிய வசதிகள் கொண்ட மருத்துவமனைகளுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மேற்கொண்டு இ.ப. நஷஹடூ, ங.த.ஐ. நஷஹடூ, சிறப்பு சிகிச்சை அளிக்கும் திறனுள்ள சிறப்பு வசதிகளைப்பொறுத்து, கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் தரம் பிரிக்கப்படுகின்றன.

அதிகபட்சமாக 51 மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன. மருத்துவமனைகளின் தரம் மதிப்பெண்கள் 41 -க்கு மேல் இருந்தால் அ1 என்று குறிப்பிடுகின்றோம். மதிப்பெண்கள் 10 -க்கு மேல் இருப்பவர்கள் அ6 என்று குறிப்பிடுகின்றோம். இவ்வாறு தரம் பிரிக்கப்பட்டபின், மருத்துவமனைகளின் அனுமதி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவில், உஙிஙீஹடூடீடுஙிடீடூசி ஹடூக்ஷ ஈடுஙூஷடுஙீங்டுடூஹஙுநீ இச்ஙிஙிடுசிசிடீடீ​ல் மடூடுசிடீக்ஷ ஐடூக்ஷடுஹ ஐடூஙூசீஙுஹடூஷடீ இச்ஙிஙீஹடூநீ​ன் பொது மேலாளர் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், பஹஙிடுங் சஹக்ஷசீ ஏடீஹங்சிகீ நநீஙூசிடீஙி டஙுச்குடீஷசி​னுடைய திட்ட இயக்குநர் மற்றும் அதிகாரிகள் அந்த மருத்துவமனையின் தகுதி மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து மருத்துவமனைகளைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கிறார்கள்.

கடந்த மைனாரிட்ட தி.மு.க. ஆட்சியிலே சில பிரச்சினைகள் இருந்தன என்று உறுப்பினர் குறிப்பிட்டார். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் அதுமாதிரியான பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை என்பதைத் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் பதிலளித்தார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் மீன் வியாபாரிகளுக்கு உரிய வாய்ப்பளிக்கப்படும் என வள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

வேறொருக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.பி.முனுசாமி ஒட்டப்பிடாரம் தொகுதி வெள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள மீன் அங்காடியில் வந்து வியாபாரம் செய்கிற மீன் வியாபாரிகளுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

டாக்டர் க.கிருஷ்ணசாமி: (புதிய தமிழகம்) கேள்வி:

 

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளப்பட்டி கிராமத்தில் மீன் ஏல விற்பனை நிலையம் மிகவும் பழுது அடைந்த நிலையில் இருக்கிறது. அங்கு சமீப காலமாக மீன் ஏலமே விடமுடியாத அளவிற்கு இருக்கிறது. எனவே, அந்த ஏல நிலையத்தை உள்ளாட்சித் துறையின் மூலமாக சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படுமா என அறிய விரும்புகிறேன்.

நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பதில்: பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அந்த இடம் ஊராட்சிப் பகுதி என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார். அது கிராமமாக இருக்கின்ற காரணத்தினால் நகர்ப்புறத்திற்கு வருவதில்லை. அப்படி இருந்தாலும்கூட அது ஒரு வியாபாரத் தலமாக இருக்கின்ற காரணத்தினால் அங்கே மீன் அங்காடிகள் வந்து வியாபாரம் செய்யக்கூடிய மையப் பகுதியாக இருக்கின்ற காரணத்தினால் அதை ஆய்வு செய்து, அந்த மீன் அங்காடியில் வந்து வியாபாரம் செய்கின்ற வியாபாரிகளுக்கும், கொண்டு வருகின்றவர்களுக்கும் உரிய வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்