25-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அறிமுகமானதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக மாணவர்கள் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர். ஏப்ரல் 4-ம் தேதி துவங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 23-ம் தேதி திங்கட்கிழமையுடன் முடிவடையுள்ளது.

தேர்வுகள் முடிவடைந்து வரும் 25-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக, மவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி தலைமையில் நட.க்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: