பகுதிநேர படிப்புகளுக்கு ஏப்.27 முதல் விண்ணப்பங்கள்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - 2012-13-ம் ஆண்டுக்கான பகுதிநேர பி.இ., பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு ஏப்ரல் 27-ந்தேதி முதல் மே.18-ந்தேதி வரை விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட இடங்களில் வழங்கப்படுகின்றன. கோயம்புத்தூர் அரசினர் பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோயம்புதூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சேலம் பர்கூர் மற்றும் திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தைபெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். பிற இனத்தவர் ரூ.300-க்கும் பட்டியல் மற்றும் பழங்குடி (எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ) இனத்தவர்கள்  ரூ.150-க்கும் கேட்பு காசோலையினை பகீடீ நடீஷஙுடீசிஹஙுநீ ஙீஹஙுசி சிடுஙிடீ ஆஉ/ஆ.சிடீஷகீ அக்ஷஙிடுஙூஙூடுச்டூஙூ, ஷச்டுஙிஸஹசிச்ஙுடீ என்ற முகவரிக்கு கோயம்புத்தூரில் காசாக்கும் வகையில் எடுத்து அளித்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் கேட்பு காசோலையுடன் சான்றிடப்பட்ட சாதிச்சான்றிதழினையும் அளிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள்  பகீடீ நடீஷஙுடீசிஹஙுநீ, டஹஙுசி​சிடுஙிடீ ஆ.உ. / ஆ.படீஷகீ. அக்ஷஙிடுஙூஙூடுச்டூஙூ, இச்டுஙிஸஹசிச்ஙுடீ ஐடூஙூசிடுசிசீசிடீ ச்க் படீஷகீடூச்ங்ச்கிநீ, இச்டுஙிஸஹசிச்ஙுடீ 641014 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.5.12.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: