முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு: எகிப்தில் ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

கெய்ரோ,ஏப். 22  - எகிப்தில் உருவான புரட்சியை தொடர்ந்து நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எகிப்தில் 32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஹோஸனி முபாரக்கிற்கு எதிராக பெரும் கிளர்ச்சி நடைபெற்றது. இதனால் அவரது ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் பொதுமக்கள் ராணுவ ஆட்சியையும் விரும்பவில்லை. ஜனநாயகமே தேவை என்பதை வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிக் சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ராணுவம் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். 32 ஆண்டு கால முபாரக் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வரும் மே மாதம் 23 ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ராணுவ ஆட்சியும் முடிவுக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போதைய ராணுவ ஆட்சியாளர்களே தேர்தலிலும் முறைகேடுகள் செய்து தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான இஸ்லாமிக் கட்சியின் அதிபர் வேட்பாளரை செல்லாது என்று அறிவித்தது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை ராணுவ தரப்பு மேற்கொண்டு வருவதால் எகிப்து மீண்டும் போர் போர்க்களமாகி கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்