முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் மகனை உயிருடன் புதைத்த தந்தை கைது

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், ஏப். 22  - சீனாவில் வீட்டுப் பாடம் எழுதாத பெற்ற மகனை தாக்கி உயருடன் புதைத்த கொலைகார தந்தையை போலீசார் கைது செய்தனர். சீனாவின் யுன்னான் மாகாணத்தை சேர்ந்தவர் லீ. கூலித் தொழிலாளியான இவரது 6 வயது மகன், வீட்டுப் பாடம் சரியாக எழுதவில்லை என்று பள்ளியில் இருந்து புகார் வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று மகனை கூப்பிட்டு கண்டித்தார் தந்தை லீ. ஆனால் லீயின் மகன் தந்தையின் கேள்விக்கு சரியான பதில் சொல்லவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகனை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி எட்டி உதைத்திருக்கிறார் . பிறகு அந்த பாலகனை அப்படியே தூக்கி எறிந்துள்ளார். பின்னர் வீட்டு சுவரில் மோதி சுயநினைவற்ற மகனை அருகில் இருந்த மலைக்கு கொண்டு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவனை அப்படியே குழிதோண்டி புதைத்து விட்டு திரும்பியிருக்கிறார் லீ. தந்தை லீயின் இந்த கொடூர செயல் மகனின் நண்பர்களுக்கு தெரியவர அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் செய்திருக்கின்றனர். இதையடுத்து லீ கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago