முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மும்பையில் 30 - ம் தேதி மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மொகாலி, மார்ச். - 27 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இந்தப் போட்டி வரும் 30 -ம்தேதி மொகாலியில் நடக்கிறது.  பாகிஸ்தான் தீவிர வாத தாக்குல் கடந்த 2008 -ம் ஆண்டு நவம்பர் 28 -  ல் மும்பையில் நடந்தது. அதன் பிறகு இந்திய மண்ணில் முதன் முறை 

யாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கால் பதிக்கிறது. மொகாலியில் வரும் 30 - ம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவை வென்ற பாகிஸ்தான் அணியும் மோத இருக்கின்றன. 

உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை கவர்ந்துள்ள இந்தியா மற் றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியை கா ண லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிவார்கள் என்பது நிச்சயம்.  

தீவிர வாத தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவிரவாதி கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. 

அதிர்ஷ்டவசமாக இலங்கை வீரர்கள் உயிர் பிழைத்து நாடு திரும்பினர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டிகள் எதுவுமே  நடக்க வில்லை. 

போட்டியிடும் இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஏற்றுக் கொள்  ளும் ஒரு நாட்டில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரை இறுதியில் இந்தியாவுடன் மோதி ஜெயிக்க விரும்புவதாக கூறிய பாகி ஸ்தான் கேப்டன் அப்ரிடி இந்தியாவின் பாதுகாப்புகள் திருப்தி அளிப் பதாகவும் கூறியுள்ளார். 

அரை இறுதியில் இந்தியாவை வெற்றி கொள்ளும் கனவுடன் பாகி ஸ்தான் இந்திய பயணத்தை மேற்கொண்டு உள்ளது. நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியாபை தோற்கடித்து மகிழ்ச்சியுடன் இந்திய வீரர்கள் அரை இறுதியில் மோத உள்ளனர்.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெ  ட் போட்டியை ஏதோ இரு நாடுகளுக்கு இடையேயான போர் போன்று கருதும் ரசிகர்கள் இந்த இரு நாடுகளிலும் உள்ளனர். இதனால் போட்டி நடைபெறவுள்ள மொகாலி மைதானம் 30 -ம்தேதி நிரம்பி வழியும் என்பது நிச்சயம். 

இந்த உலகக் கோப்பை தொடர் முதலில் பாகிஸ்தானிலும் நடப்பதாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.சி.சி. பாகிஸ்தானை கைவிட்டது. பின்னர் இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசத்தில் நடக்க முடிவு செய்யப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்