முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணை மனுக்கள் தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஏப். 22  - தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை நீண்ட தாமதத்துக்குப் பிறகு நிராகரிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த பிட்டா படுகொலை வழக்கில் பஞ்சாபின் புல்லர் என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அவர் கருணை மனு அனுப்பியிருந்தார். ஆனால் அவரது கருணை மனு நீண்ட காலமாக காத்திருப்பில் வைக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது. நீண்டகால தாமதத்துக்குப் பின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருப்பதால் புல்லரை தூக்கிலிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் இதை மத்திய அரசு எதிர்த்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

இதேபோன்ற ஒரு நிலைமை ராஜீவ் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களும் எதிர்கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த வழக்கில் அளிக்கப்பட உள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்