முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாதத்துக்கு ஒரு முறை சட்ட மன்றம் சென்றால் போதும்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

ஈரோடு, ஏப்ரல்.22 - தொடர்ந்து சரிந்து வரும் தங்கள் கட்சியின் இமேஜை தூக்கி நிறுத்துவதற்காக தே.மு.தி.க வெற்றி பெற்ற தொகுதிகளில் பொது மக்களிடம் மனு வாங்குகிறேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கிளம்பியுள்ளர். நேற்று முன்தினம் கோவை சூலூர் தொடுதியில் மனு வாங்கி விட்டு நேற்று காலை 10 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க சட்ட மன்ற உறுப்பினர் சந்திர குமார் ரின் சட்ட மன்ற  லுவலகத்தில் பொது மக்களிடம் விஜய காந்த்மனு வாங்க போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு விஜயகாந்த் வரப்போகிறார் என ஒலி பெருக்கி அலறிகொண்டிருந்தது.  ஆனால் விஜய காந்த் 11.30 மணிக்கு தான் வந்தார்.  அப்போது ஈரோடு மாவட்ட மஞ்சள் விவசாயிகள் அவரிடம் மனு அளித்து விட்டு தாங்கள் நடத்தப்போகும் விவசாய மாநாட்டிற்கு வாருங்கள் என அழைத்த போது அப்போது நான் எங்கு இருப்பேன் என்று எனக்கு தெரியாது முடிந்தால் வருகிறேன் என்று  பதில் கூறினார். மேலும் விஜய காந்த் உங்கள் பிரச்சனைகளை சட்ட மன்றத்தில் பேசுகிறேன் என்று கூறிவிட்டு தீடிர் என்று 6 மாதத்திற்கு ஒரு முறை சட்ட மன்றத்திற்கு சென்றால் போதும் . தொடர்ந்து சட்ட மன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சட்டம் இல்லை ச ட்ட சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும், மானியகோரிக்கை விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என எந்த விதியும் இல்லை ,என தன்னை தேர்தெடுத்த வாக்காளர்கள் மனம் புண் படும் படி பேசினார்.  தொடர்ந்து நெடுநேரம் காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடமும் நான் இங்கு உங்களுக்கு பதில் செல்ல முடியாது வெளியே செல்லுங்கள் என கடுப்படித்தார். தொடர்ந்து வெளியே வந்த விஜய காந்த் அங்கு மனு வழங்க மிக மிக குறைந்த அளவில் பொது மக்கள் இருந்த தால்டென்சன் ஆனார்.  அங்கு மனு கொடுக்க வந்திருந்ததில் பாதிபேர் தே.மு.தி.க வை சேர்ந்தவர்கள் தான் . மீதி உள்ள பொது மக்களிடம் மனு வாங்கிய விஜய காந்த் அவற்றிற்கு சரியான பதில் கூறாமல் மனு அளித்த சிலர் கையில் 500, 1000 என பணத்தை கையில் திணித்து  அனுப்பினார். மனு கொடுத்த சிலர் எம்.எல். ஏ விடம் மனு கொடுத்த போதே ஒன்றும் நடக்கவில்லை இவரிடம் மட்டும் கொடுத்த என்ன நடக்க போகிறது. என வேதனையுடன் கூறிச்சென்றனர். சட்ட மன்றத்திலில் போய் பேச வேண்டிய தில்லை என கூறும் விஜய காந்த் வேறு எங்கு போய் தான் பேசுவார்?.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்