முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பாவுக்கு லோக் ஆயுக்தா கோர்ட்டு நோட்டீசு

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

 

பெங்களூர்,ஏப்.22 - சட்டவிரோதமாக நில ஒதுக்கீடு தொடர்பாக வந்த புகாரையொட்டி முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு அந்த மாநில சிறப்பு லோக்ஆயுக்தா கோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா முதல்வராக இருந்த எடியூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதில் ஒரு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனால் தனது இரண்டு மகன்கள், மருமகன் ஆகியோர்களுக்கு அரசு நிலத்தை குறைந்த விலைக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது. அந்த நிலத்தை அவர்கள் ஒரு கம்பெனிக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

இந்தநிலையில் எடியூரப்பா தனது மகன்கள், மருமகன் ஆகியோர்களுக்கு எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக புகார் ஒன்றை வழக்கறிஞர் சிராஜின் பாஷா என்பவர் கர்நாடக மாநில சிறப்பு லோக் ஆயுக்தா கோர்ட்டில் அளித்தார். அந்த புகாரில் போதுமான ஆதாரங்கள் இருந்ததால் வரும் மே மாதம் 24-ம் தேதி ஆஜராகும்படி எடியூரப்பாவுக்கு சிறப்பு லோக்ஆயுக்தா கோர்ட்டு நீதிபதி என்.கே.சுதீந்திர ராவ் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும் எடியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோகன் குமார் ஆகியோர்களுக்கும் நோட்டீசு அனுப்ப நீதிபதி சுதீந்திர ராவ் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்