முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி: பெங்களூர் சேலஞ்சர்ஸ் வெற்றி

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, ஏப். 22 - 5 -வது ஐ.பி.எல். 20 -க்கு 20 போட்டியி ல் மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ் சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ் த்தியது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி தரப்பில், மே.இ.தீவு வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடி , அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பக்கபலமாக டிவில்லியர்ஸ் ஆடினார்.  முன்னதாக பெளலிங்கின் போது, வே கப் பந்து வீச்சாளர் ஜாஹிர்கான் மற்று ம் டொனால்டு இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக வினய் குமார் மற்றும் படேல் இருவரும் பந்து வீசினர். 

ஐ.பி.எல். போட்டியின் 25 -வது லீக் ஆட்டம் சண்டிகாரில் மொகாலி நகரி ல் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மை தானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந் தது.  

இதில் கேப்டன் டேவிட் ஹஸ்சே தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெ வன் அணியும், கேப்டன் டேனியல் வெட்டோரி தலைமையிலான பெங்களூ ர் ராயல் சேலஞ்சர் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெ ட்டை இழந்து 163 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

கேப்டன் டேவிட் ஹஸ்சே பொறுப்பு டன் ஆடி 34 பந்தில் 41 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, அசார் மெக்மூத் 14 பந்தில் 33 ரன்னையு ம், ஷான் மார்ஷ் 17 பந்தில் 26 ரன்னையும், மந்தீப் சிங் 20 ரன்னையும் எடுத்த னர். 

பெங்களூர் அணி தரப்பில், ஜாஹிர்கா ன் மற்றும் ஏ.பி. மெக்டொனால்டு இருவரும் 25 ரன்னைக் கொடுத்து தலா 2 விக்கெட் எடுத்தனர். தவிர, வினய் குமார் மற்றும் வி. படேல் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பெங்களூர் அணி 164 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்னை எடுத் தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் பெங்க ளூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

பெங்களூர் அணி சார்பில், கெய்ல் சூறாவளியாக ஆடி, 56 பந்தில் 87 ரன் னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற் றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, டிவில்லி யர்ஸ் 39 பந்தில் 52 ரன்னை எடுத்தார். 

பஞ்சாப் அணி தரப்பில், அவானா 34 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத் தார். தவிர, பி. சாவ்லா 1 விக்கெட் எடு த்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago