முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: ராம்பால் - புதாதீனுக்கு இடம்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டிரினிடாட், ஏப். 22 - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 -வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான மே.இ.தீவு அணியில் ராம்பால் மற்றும் புதாதீனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. சுழற் பந்து வீச் சாளர் பிஷூ நீக்கப்பட்டு உள்ளார். 

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கே ல் கிளார்க் தலைமையில் மேற்கு இந்தி யத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலைமை யிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. மே.இ.தீவு மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஏற்கனவே 2 டெஸ் டுகள் முடிவடைந்து விட்டன. 

இதன் 3 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிகா தீவில் வரும் திங்கட்கிழமை துவங்க இருக்கிறது. இதற்காக 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை மே.இ.தீவு கிரிக்கெட் வா ரியம் அறிவித்துள்ளது. 

இந்தப் பட்டியலில் கயானாவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் அசாத் புதாதீன் புதி தாக அணியில் இடம் பெற்று இருக்கிறார். அவர் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் அடிப்படையில் இதில் இடம் பிடித்து இருக்கிறார். 

துணைக் கேப்டன் கிர்க் எட்வர்ட்சிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவ ர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக் கிறார். அவருக்குப் பதிலாக மிதவேகப் பந்து வீச்சாளர் ரவிராம்பால் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 

ராம்பால் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் தோள்பட்டை வலியால் அவ திப்பட்டு வந்தார். இதனால் ஒரு நாள் போட்டிக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை. 

26 வயதான புதாதீன் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அதிக ரன் குவித்த வீரர்களில் 2 -வது இடத்தை ப் பிடித்து இருக்கிறார். அவர் மொத்தம் 576 ரன்னை குவித்தார். இதன் சராசரி 48 ஆகும். 

இது குறித்து மே.இ.தீவு தேர்வுக் குழுத் தலைவரான கிளைடே பட்சிடம் கேட்ட போது, புதாதீன் மே.இ.தீவு அணிக் கு கிடைத்த பொக்கிஷம் என்றார் அவர். 

மேலும், புதாதீன் மே.இ.தீவின் ஏ அணியில் சிறிது காலம் ஆடினார். தற் போது அவரிடம் நல்ல முன்னேற்றத் தை பார்க்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

மண்டல ரீதியாக நடந்த 4 நாள் ஆட்ட த்தில் புதாதீன் சிறப்பாக பேட்டிங் செ ய்து 500 ரன்னுக்கு மேல் எடுத்தார். இதி ல் 2 சதமும் அடக்கம். மிடில் ஆர்டரில் அவர் நிலைத்து ஆடுவார். மிதவேகப் பந்துகளையும் அவர் வீசுவார். அவர் அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றும் பட் கூறினார். 

இளம் இடது கை வீரரான புதாதீன் கே ப்டன் டேரன் சம்மி தலைமையிலான மே.இ.தீவு அணியில் இணைந்து ஆஸி. க்கு எதிரான 3 -வது டெஸ்டில ஆடுகிறார்.​

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்