ஓசூர் ஸ்பெஷல் எஸ்.ஐ. குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப். 22 - பணியின் போது மாரடைப்பால் மரணமடைந்த ஓசூர் நகர காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஆர். வரதராஜன் 19.4.2012 அன்று பணியில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காவல் துறை உதவி ஆய்வாளர் வரதராஜன் பணியில் இருக்கும் போது காலமானார் என்னும் செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. வரதராஜன் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடமையாற்றிக் கொண்டிருந்த போது காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் வரதராஜன் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: