முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1,100 கோடி வங்கிகடன் மோசடி லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்தது

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 23 - பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாகப் பெறப்பட்ட ரூ. 1,100 கோடியை மோசடி செய்த ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழலை மத்திய லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. விவசாயிகளுக்கு  ஆமணக்கு விதைகளை சப்ளை செய்யவும் ஆமணக்கு செடிகளை வளர்க்கவும்  நிதி உதவி செய்யும் நிறுவனம் என்று கூறி ஒரு தனியார் கம்பெனி பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பல கோடிக்கு கடன்களை பெற்றுள்ளது. இந்த கம்பெனி பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா வங்கியிடமும் கடன்பெற்றுள்ளது. இந்த கடன் தொகை சரியான முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா தணிக்கை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தங்கள் வங்கியில் இருந்து பெற்ற ரூ. 50 கோடி கடனை அந்த தனியார் கம்பெனி மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த தகவல் மற்ற வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின்பேரில் மத்திய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் புலன் விசாரணை செய்ததில் இந்த கம்பெனி 9 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ. 1,100 கோடியை கடனாகப் பெற்று அதை மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் அந்த தனியார் கம்பெனியின் பெயர் குறித்த விபரங்கள் எதையும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இது ஒரு மிகப்பெரிய மோசடி. விவசாயிகளின் பெயரில் இந்த கடன் வாங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்