முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டரை மீட்க சட்டீஸ்கர் அரசு தீவிர நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர்,ஏப்.24 - கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்க சட்டீஸ்கர் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல முக்கியப் பிரமுகர்கள் கொண்ட தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. க்சட்டீஷ்கர் மாவட்டத்தில் சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் அலெக்ஸ் பால் மேனன். இவர் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறந்த, நேர்மையான கலெக்டரான இவர் கடந்த பல தினங்களுக்கு முன்பு ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மக்களோடு மக்களாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஊடுருவி கலெக்டர் மேனனை கடத்திச் சென்றுவிட்டனர். முதலில் மேனனை கடத்தியது யார் என்று தெரியாமல் இருந்தது. மாவோயிஸ்ட் பிரிவுகள் இந்த கடத்தல் சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்காமல் இருந்தது. பின்னர் மேனனை கடத்தியது நாங்கள்தான் என்றும் அவரை விடுவிக்க 3 நிபந்தனைகளை மாவோயிஸ்ட்கள் விதித்துள்ளனர். அதுவும் நாளைக்குள் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காலக்கெடுவை நிர்ணயித்துள்ளனர். 

இதனையொட்டி மேனனை மீட்கும் முயற்சியில் சட்டீஸ்கர் அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதல்வர் ராமன் சிங் தலைமையில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவோயிஸ்ட்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்பட தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் துணைமுதல்வர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று காலையில் மாவோயிஸ்ட் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று தெரிகிறது. அதற்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் விதித்துள்ள நிபந்தனைகளில் ஒன்றான 8 மாவோயிஸ்ட்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை அரசு நிறைவேற்றும் என்று தெரிகிறது. பஸ்தர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படை வாபஸ் பெற வேண்டும். மாவோயிஸ்டுகளை தேடும் பணியை நிறுத்த வேண்டும் என்ற இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. ஆஸ்துமா நோயாளியான மேனன் கடத்தப்பட்டபோது அவரிடம் மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் தனது கணவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது மனைவி உருக்கமான வேண்டுகோளை ஏற்கனவே விடுத்துள்ளார். மேனனை பத்திரமாக மீட்கும் விஷயத்தில் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் அமைச்சகமும் அவ்வவப்போது ஆலோசனைகளை கூறிவருகின்றன. மாவோயிஸ்ட்கள் விதித்துள்ள காலகெடு நாளையுடன் முடிவடைகிறது. அதனால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படலாம் என்று உறுதியாக தெரிகிறது. நாளைக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் நீதிமன்றத்தில் மேனன் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதித்துள்ளனர். 

 

 

கலெக்டர் மேனன் இருக்கும் இடம் தெரிந்தது

 

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் இருக்கும் இடம் தெரிந்தது. 

கடந்த சனிக்கிழமை அன்று கடத்தப்பட்ட கலெக்டர் மேனனை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைவான இடத்தில் வைத்திருந்தனர். அவர் இருக்கும் இடம் முதலில் தெரியாமல் இருந்தது. சட்டீஷ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் அல்லது அண்டை மாநிலமான ஒடிசாவில் மேனனை மாவோயிஸ்ட்கள் மறைத்து வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அடர்ந்த காட்டுப்பகுதியாக இருப்பதாலும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் போலீசார், மத்திய ரிசர்வ் படையினர் தேடியும் மேனனை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஆளில்லாத விமானம் மூலம் மேனனை தேட முடிவு செய்யப்பட்டது. விமானம் மூலம் தேடினால் மேனன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்றும் ஆராயப்பட்டது. இறுதியில் ஆளில்லாத விமானம் மூலம் நேற்று மேனனை தேடநடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஆளில்லா விமான் தேடியது. அப்போது ஒடிசாவில் காட்டுப்பகுதிகள் நிறைந்த மல்க்கான்கிரி என்ற இடத்தில் கலெக்டர் மேனன் இருப்பதும் அவரை சுற்றி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்