முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.: கொல்கத்தா டெக்கான் சார்ஜர்சை வீழ்த்தியது

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கட்டாக்,  ஏப். 24 - 5 -வது ஐ.பி.எல். 20 -க்கு 20 கிரிக்கெட் போட்டியில் கட்டாக்கில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தி யாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. ஐ.பி.எல். லின் முன்னாள் சாம்பிய னான டெக்கான் சார்ஜர்ஸ் அணி இந்த சீசனில் மோசமாக ஆடி வருகிறது. இந்தத் தோல்விஅந்த அணிக்கு தொடர்ந்த 5 -வது தோல்வியாகும். இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில் கேப்டன் காம்பீர் மற்று ம் எம்.கே. திவாரி இருவரும் நன்கு பே ட்டிங் செய்து அணியை வெற்றிப் பா தைக்கு அழைத்துச் சென்றனர். அவர்க ளுக்கு பக்கபலமாக காலிஸ், பிஸ்லா மற்றும் மெக்குல்லம் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, பிர ட்லீ மற்றும் பாலாஜி இருவரும் சிறப் பாக பந்து வீசினர். அவர்களுக்கு ஆதர வாக நரைன் மற்றும் பாட்டியா ஆகி யோர் பந்து வீசினர். 

ஐ.பி.எல். போட்டியின் 29 -வது லீக் ஆட்டம் ஒரிசாவில் தலைநகரான கட்டாக்கில் பகலிரவு ஆட்டமாக நடந் தது.  

இதில் கேப்டன் சங்கக்கரா தலைமையி லான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி கொல்கத்தாவின் பெளலிங்கை சமாளி க்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 7 விக்கெட்டை இழந்து 126 ரன்னை எடுத்தது. 

டெக்கான் அணி சார்பில், துவக்க வீரர் எஸ்.தவான் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் கால் சதத்தை தாண்டவில்லை.

எஸ்.தவான் 50 பந்தில் 50 ரன்னை எடுத் தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ச ர் அடக்கம். கீப்பர் பார்த்திவ் படேல் 19 பந்தில் 23 ரன்னை எடுத்தார். தவிர, டுமினி 16 ரன்னையும், கேப்டன் சங்கக் கரா 12 ரன்னையும், ஒயிட் 10 ரன்னையும் எடுத்தனர். 

கொல்கத்தா அணி தரப்பில் பாலாஜி 22 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். சுனில் நரைன் 26 ரன்னைக் கொ டுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிர ட்லீ மற்றும் பாட்டியா இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

கொல்கத்தா அணி 127 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற எளிதா  ன இலக்கை டெக்கான் அணி வைத்த து. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்னை எடுத்தது. 

இதனால் கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.

கொல்கத்தா அணி சார்பில் கேப்டன் காம்பீர் 28 பந்தில் 30 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். எம்.கே.திவாரி 28 பந்தில் 30 ரன்னை எடுத்தார். காலிஸ் 24 பந்தில் 23 ரன்னை எடுத்தார். தவிர, மெக்குல்லம் மற்றும் பிஸ்லா இருவரும் தலா 10 ரன் எடுத்தனர். 

டெக்கான் அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஸ்டெயின் 26 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, அமித் மிஸ்ரா, ஆன்கிட் சர்மா மற்றும் ஆனந்த் ராஜன் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பிரட்லீ தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago