முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.24 - மதுரை மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாசித்திரை திருவிழாவாகும். அதிலும் மீனாட்சி திருக்கல்யாணம் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9.36 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதன் பிறகு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு நெய்வேத்தியம் படைத்து சிற்ப்பு தீபாராதனைகள் நடந்தன. முன்னதாக மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் ப்ரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கரு.முத்து கண்ணன், கோவில்இணை ஆணையர் ஜெயராமன், போலீஸ் துணை ஆணையர் திருநாவுக்கரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

   விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் வடக்கு ஆடிவீதியில் அமைந்து திருக்கல்யாண மேடையில் அடுத்த மாதம் 2ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்