முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக கோகோய் பதவியேற்றார்

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.24 - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ரஞ்சன்கோகோய் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நேற்று பதிவியேற்றுக்கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 

1954 ஆம் ஆண்டு நவம்பர் 18 ம் தேதி பிறந்த இவர் 1978 இல் வழக்கறிஞர் ஆனார். அதன்பிறகு 2001 ஆம் ஆண்டு இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கவுகாத்தி ஐகோர்ட்டில் அவர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ம் தேதி இவர் பஞ்சாப் -அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  அதன்பிறகு இப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை  27 ஆக உயர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்