முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லீம் தலைவர் நீக்கம் எங்கள் குழுவை பாதிக்காது

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.24 - முஸ்லீம் தலைவர் முப்தி ஷமீம் கஷ்மி நீக்கப்பட்டிருப்பதால் எங்கள் குழுவை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். நாட்டில் மலிந்து கிடக்கும் ஊழலை ஒழிக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அண்ணாஹசாரே குழுவினர் கூட்டம் நேற்றுமுன்தினம் நொய்டாவில் நடைபெற்றது. இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ள சாந்திபூஷன், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி, கஷ்மி மற்றும் குழுவில் உள்ள உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குரு ராம்தேவுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பது மற்றும் போராட்டம் நடத்துவதால் அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவை பாதிக்குமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதை கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லீம் உறுப்பினர் கஷ்மி செல்போனில் பதிவு செய்துகொண்டியிருந்தார். அதை மற்ற உறுப்பினர்கள் பார்த்து செல்போனை பறித்துவிட்டனர். செல்போனை திறந்து பார்த்தபோது அதில் 3 சுருள்கள் இருப்பது தெரியவந்தது. ஹசாரே குழுவினர் எடுக்கும் முடிவை கஷ்மிதான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கூட்டத்தில் இருந்து கஷ்மி வெளியேற்றப்பட்டதோடு குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். 

இதனால் ஊழலுக்கு எதிரான குழுவின் நடவடிக்கையை எந்தவிதத்திலும் பாதிக்காது. குழுவில் பிளவும் ஏற்படாது என்று ஹசாரே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். ஊழலுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தில் ராம்தேவ் கலந்துகொள்வது குறித்து எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் ஒரு மாத காலம் வரை பிரசாரம் செய்ய உள்ளேன். கறுப்புப்பணம், ஊழலுக்கு எதிராக நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு உள்ளது. ஜன் லோக்பால் அமைப்பதற்கும் நல்ல ஆதரவு உள்ளது. ஊழலை ஒழிக்க நாங்கள் அனைவரும் சேர்ந்து போராடி வருகிறோம் என்றும் ஹசாரே மேலும் கூறினார். இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக நானும் ராம்தேவும் பிரசாரம் செய்யும்போது சந்திக்கும் போதெல்லாம் ஒரு மேடையில் சேர்ந்து  ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்றும் ஹசாரே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்