முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டரை மீட்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு கடிதம்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.24 - சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஆட்சியர் அலெஸ்பால்மேனனை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:- சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்பால் மேனன் கடந்த 21-ம் தேதி மாலை மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் காட்டுக்குள் கடத்திச் செல்லப்பட்டார். கேரலாபால் பகுதியில் தொலைதூர கிராமத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த அவரை 40 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. அப்போது நடந்த சண்டையில் கலெக்டரின் பாதுகாவலர்கள் அம்ஜத்கான், கிசுன்குஜூர் ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உதவவேண்டும் என்று ஆட்சியரின் தந்தை, மனைவி, மாமனார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையடுத்து கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனனை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை நேற்று (ஏப்.23-ம் தேதி) எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தின் விபரம் வருமாறு:-

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெஸ்பால்மேனன் கடந்த ஏப்.26-ந்தேதி அவர் ஒடிஷா மாநிலத்தின் எல்லையோர சிறிய கிராமத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தன்னுடைய அலுவலக ஆய்வை மேற்கொண்டிருந்தபோது, மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அவர் தமிழ்நாட்டிலுள்ள திருநல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர், அவருடைய பாதுகாப்பு குறித்து அவருடைய குடும்பத்தார் மிகவும் கவலையில் உள்ளனர். 

மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் தன்னுடைய கடமையை செய்து கொண்டிருந்தபோது, அவர் கடத்தப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் மூலமாக அவரை விரைந்து மீட்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று நான் நம்புகிறேன். அவரது பாதுகாப்பு குறித்து உள்ளூர் மக்களும், அவருடைய குடும்பத்தாரும் மிகுந்த வருத்ததில் உள்ளனர் என்பதை நான் தங்களிடம் வலியுறுத்த விரும்புகிறேன்.

கடத்தப்பட்ட ஆட்சியரின் முன்கூட்டிய விடுதலை என்ற நல்ல செய்தியை அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கடத்தப்பட்ட ஆட்சியரின் பாதுகாப்பான விடுதலையை விரைவாக உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நான் உறுதியாக வலியுறுத்துகிறேன். அதனால் அவரது குடும்பத்தாருக்கு நிம்மது ஏற்படும் என்பதை தங்களுக்கு  தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago