முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இராணுவ தலைமை தளபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - இந்திய இராணுவத்தின் தலைமை தளபதி வி.கே. சிங்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் கோர்ட்டின் நேரத்தை வீணடித்தவற்காக மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது இது குறித்த விபரம் வருமாறு:- சென்னையில் உள்ள ஊழல் ஒழிப்பு மற்றும் குற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு அமைப்பின் தலைவராக இருப்பவர் டாக்டர் விசுவமூர்த்தி. இவர் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கிற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் வி.கே.சிங் ராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக தெரிவித்துள்ளார். 

அவர் ராணுவத்தில் தரமான தோட்டாக்கள் இல்லை என்று கூறி இருப்பது ராணுவ தொழில்நுட்ப விளம்பரப்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசுக்கு எதிராக அவர் போர் தொடுக்க முயற்சித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. வி.கே.சிங்கின் இந்த செயலானது அவர் ராணுவத்தில் பணியில் சேரும்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது. எனவே அவர் எந்த தகுதி அடிப்படையில் பதவியில் தொடர்கிறார் என்பது பற்றி விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர் வக்கீல் அசன்பைசல் ஆஜராகி, இம்மனு பொதுநல நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், இம்மனுவை கோவாரண்டோ மனுவாக தாக்கல் செய்யமுடியாது. கோவாரண்டோ மனுவுக்கும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரும் மனுவுக்கும் மனுதாரர் விசுவமூர்த்திக்கு வித்தியாசம் தெரியவில்லை. இம்மனு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இம்மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர் விசுவமூர்த்தி கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம். அந்த தொகையை கோர்ட்டு குறிப்பிடும் அனாதை இல்லத்திற்கு 2 வாரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்