முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. பின்தங்கிய நிலைக்கு மாயாவதி அரசே காரணம்

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஏப்.24 - உத்தரபிரதேச மாநிலம் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கு மாயாவதி அரசே காரணம் என்று உ.பி. பொதுப்பணித்துறை அமைச்சர் சிவ்பால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சைலாய் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சிவ்பால் யாதவ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உத்தரபிரதேச மாநிலம் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாயாவதி அரசு முறையாக பயன்படுத்தியிருந்தால் நாட்டிலேயே நம்பர் ஒன் மாநிலமாக உ.பி.தான் இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாயாவதி ஆட்சியில் பெருமளவு ஊழல்கள் இருந்ததால்தான் உ.பி. மாநிலம் இந்த நிலைக்கு கீழே வந்துள்ளது என்றும் உத்தரபிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் தங்களது சமாஜ்வாடி கட்சி அரசு சரியான தீர்வுகளை காணும் என்றும் அந்த அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்