முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: சரத்பவார் திடீர் பல்டி

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.24 - புதிய ஜனாதிபதியாக எந்த அரசியல் கட்சியையும் சேராத ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை என்று மத்திய அமைச்சர் சரத்பவார் திடீரென்று பல்டி அடித்துள்ளார். தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரதீபா பாட்டில் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும். இந்தநிலையில் நவீன்மும்பையில் நேற்றுமுன்தினம் மாணவிகள் விடுதியை மத்திய விவசாயத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அடுத்த ஜனாதிபதியாக எந்த அரசியல் கட்சியையும் சேராதவரை தேர்ந்தெடுக்க் வேண்டும் என்று கூறினார். இதை சரத்பவார் நேற்று மறுத்துள்ளார். அடுத்த ஜனாதிபதி எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புதிய ஜனாதிபதி தேர்வு எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்று நான் கூறவில்லை என்றும் பவார் கூறியுள்ளார். எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரைத்தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் கூறினேன் என்றும் பவார் பல்டி அடித்துள்ளார். ஜனாதிபதியை தனியாக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ மெஜாரிட்டி இல்லை. அதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரு கூட்டணியும் மேல்மட்டத்தில் சந்தித்து பேசி யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பான தலைமையானது பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். இந்த நேரத்தில் நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய துணை ஜனாதிபதியும் வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும் என்றும் சரத்பவார் மேலும் கூறினார். 

காங்கிரஸ் கட்சியில் 31 சதவீத ஓட்டுக்களும் தேசிய ஜனநாயக கூட்டணியில் 24 சதவீத ஓட்டுக்களும் உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஏறக்குறைய 40 சதவீத ஓட்டுக்கள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் 30 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுக்கள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago