முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் 9 பேர் பீகாரில் வெளியேற்றம்

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

பாட்னா, ஏப்.24 - விசா நிபந்தனைகளை மீறியதாக பீகாரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 9 சுற்றுலா பயணிகள் பீகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் அம்மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பீகார் மாநிலம் நவாடா நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த பாத யாத்திரை ஒன்றிலும் ஆலோசனைக்கூட்டம் ஒன்றிலும் பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் சிலர் பங்கேற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பீகார் போலீசார் அந்த சுற்றுலா பயணிகளின் விசாக்களை பரிசோதித்து பார்த்ததில் அவர்கள் விசா விதிமுறைகளை மீறி பீகாரில் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 9 பிரான்ஸ் சுற்றுலா பயணிகளை போலீசார் கைது செய்தனர். பிறகு மேல் அதிகாரிகளின் உத்தரவுப்படி அவர்கள் 9 பேரும் பீகார் மாநிலத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இவர்கள் 9 பேரும் வைத்திருந்தது சுற்றுலா பயணிகளுக்கான விசா. ஆனால் அவர்கள் தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசா விதிமுறைகளை மீறிய செயலாகும் என்றும் அதனால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டு பிறகு மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்று பீகார் மாநில காவல்துறை தலைவர் அபியானந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு தூதரகத்திற்கு பீகார் போலீசார் தகவல் தந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்